பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாமே நடப்போம்
நாமே கடப்போம்!
நமக்காய் உள்ளதை
நாமே அடைவோம்.

(நம்பிக்கையின்பயணம்)

வெளிச்சங்களை மென்றுவிட்டு
இருள் நீரில் சறுக்கி விழுந்த
உலகுக்கு
விடியல்களின் மூச்சு முட்ட
நம்பிக்கைகளின் உயிர்
ஊட்டுவோம்

(நம்பிக்கையின் உயிர்)

புதுக் கவிதையில் தனிமனித அகவய நோக்கில் எழுதுகிறவர்களில் சிலர் 'ஸர்ரீயலிசம்'என்று சொல்லப்படுகிற ஒரு உத்தியின்படி எழுதுவதிலும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

ரீயலிசம் என்பது எதார்த்தம்... ஸர்ரீயலிசம் என்பது மிகை எதார்த்தம் என்று தமிழில் குறிப்பிடப்படுகிறது. ஸ்ர்ரீயலிசம் என்பது உள இயல் ஆய்வு முறைப்படி, அதீதமான கற்பனைகளையும் உள் மனசின் ஆசைகளையும்வெளிப்படுத்துவது என்றாகும். அப்படி வெளியிடப்படுகிற எண்ணங்களும் நினைப்புகளும் அறிவுக்குப் பொருந்தி வர வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

தமிழில் ஞானக்கூத்தன், கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளில் ஸர்ரீயலிசம் வெகுவாகக் கலந்துகாணப்படும்.

மலையருவி கவிதைகளிலும் இந்தப் பாணி விரவிக் கிடக்கிறது.