பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

தத்துவம் வாழ்க்கை நிலையின் சூட்டை மறந்து விடும்படி செய்து கவிஞரை வெறும் கனவுகளில் ஆழ்த்தி விடுவதில்லை, யதார்த்த நிலைகளை எடுத்துக்காட்டுகிற அவருடைய கவிதைகள் இதை உணர்த்தும்.

ஒன்றாய்க் கூடி
ஒன்றைத் தேடுவோம்
தனித் தனியாகத்
தனிமையில் இருந்து
அவனோ, அவளோ, அதுவோ
எதுவோ தேடுவோம்

பையின் காற்றைக்
கையில் பிடிக்கக்
கையில் பிடித்த
காற்றைக் கரைக்க
தேடுவோம்...தேடுவோம்
கூடித் தேடுவோம்
தேடி ஓடுவோம்.

தேடல் கனத்து தீவிரமாகி மும்முரப்படுகையில், வாழ்க்கைத் தீயின் சூடு உறைக்கிறது. உடனே என்ன நேர்கிறது? கவிதை இதை அழகாக சித்திரிக்கிறது.

சூடாகிப் போன
தத்துவச் சிமினி
நடைமுறை தெறிக்கப்
பட்டென வெடித்துச் சிதறியது.

அப்படி பாதிக்கிற தெறிப்பு எது? என்று பார்த்தால்,'அய்யோ பசி'...என்று அறிவிக்கிறது கவிதை,