பக்கம்:மலையருவி கவிதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வாழ்க்கையில் லயித்து வாழ்க்கையேயாகி அனுபவிக்கிறவனே அனுபவமாய், காண்கிறவனே காணப்படுகிற பொருளாகவும் ஒன்றி விடுகிற ஆன்மீக நிலையை மலையருவியின் கவிதைகள் சில வெளிப்படுத்துகின்றன.

எழுதும் தூரிகை
வண்ணக் குழம்பில்
நானே குழைந்து
ஓவியமாகிறேன்

தூரிகை பிடித்த
விரல்களின் வழியே
நானே படர்ந்து
காட்சியாய் கரைகிறேன்

மகுடியை இசைக்கும் லயிப்பில்
நானே பாம்பாய்
நெளிந்தாடுகிறேன்

ஊதும் குழலில்
காற்றாய்க் கரைந்து
உயிரே இசையாய் உருகிடுகின்றேன்.

ஆயினும் 'ஓய்வைத் தேடி, ஓயா அலைச்சல்' ஆகத்தான் மனித வாழ்க்கை இருக்கிறது என்று கவிஞர் உணர்த்துகிறார்.

வாழ்க்கையின் உய்வு அல்லது உயர்வு, தன்னைத் தானே அறிவது; தன்னுள் தன்னையே கண்டு இன்புறுவதுதான் என்று தத்துவ ஞானம் அறிவுறுத்துகிறது. கவிஞர் மலையருவியும் இப்