பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O விளையுமிடம் குன்னூர், உதகை ஆகிய இரு மாவட்டங்க, ளாகும். உதகை வட்டத்தைச் சேர்ந்த சோலூர்க்கிராமங் கள், வயநாடு, மசினகுடி ஆகிய இடங்களில் நெல் விளை கிறது. கூடலூர் வட்டத்து விளைபொருட்களிலே இராகி, சாமை குறிப்பிடத்தக்கவை. - . . . . . : மக்கள் தொகை : 1951-ல் நீலமலை மாவட்டத்தின் மக்கள் தொகை 31. இலட்சமாகும். இவர்களுக்குள்ளே மலைக்குடிகள் 12,548. பேர் ஆதித்திராவிடர்கள் 52,899 பேர்; ஏனைய பின் தங் கிய வகுப்பினர் 9 1,177 பேர். இந்த மாவட்டத்திலே 1941-1951 முடிய மக்கள் தொகையின் பெருக்கம் 48.7 சதவிகிதமாகும். இப்பெருக்கத்திற்குக் காரணம், அங் குள்ள தேயிலைத் தோட்டங்கள், காப்பித் தோட்டங்கள், இரண்டு அணைக்கட்டுகள், உணவு உற்பத்தி இயக்கம் ஆகியவைகளில் தொழில் வாழ்வு நடத்த ஏராளமானபேர் வெளிநாடுகளிலிருந்து வந்து குழுமியதேயாகும். இம்மாவட் புத்தின் பிறப்பு விகிதம் : 33.5/1000, இறப்பு விகிதம்: 19.4/1000. - நாட்டுப் பூங்கா : o, இது, முதுமலே விலங்ககம் எனப்படும். இதனுடைய பரப்பளவு 24 மைல். இது கூடலூரிலிருந்து மைசூருக்குச் செல்லும் சாலேயில் அமைந்துள்ளது. இப்பூங்கா வெறும் பூங்கா அன்று, இயற்கையாயமைந்த எழில்மண்டபமாகும். ஒரு பக்கம் மலைபோன்ற மதயானைகள் முழக்கமிடும்; இன் ைெருபக்கம்புலியின் உறுமல் மலையெல்லாம் எதிரொலிக்கும் மற்ருெரு பக்கம் புள்ளிமான்கள் துள்ளி விளையாடும்; இந்த எழிற்காட்சியைக் காண நாடெங்கனும் இருந்து மக்கள் கூட்டம்கூட்டமாக வந்தவண்ணம் இருக்கிருர்கள். கார்குடி யிலேதான் காட்டு மாளிகை உள்ளது. இங்குதான் மக்கள் தங்குவர். பூங்காவினுள்ளே மக்கள் யானைமீதமர்ந்து உலா வருவர். இந்தப் பூங்காவை மிகப்பெரும் பரப்புள்ள தாக்கவும், பேனியிலும், முதுமலையிலும் காட்டு மாளிகை