பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ வேலைகள் விரைவாகச் செய்யப்பட்டு வருகின்றன. காட் டேரி ஆறு, குன்னுரர் மாவட்டத்தில் ஒடுகிறது. இவ்வாற்றை வளைத்து உருவாக்கப்பட்டதே காட்டேரி ஆற்றலகமாகும். இந்த ஆற்றலகத்தால் மின் சக்தி பெற்று ஒடுவதே அருவங் காடு என்னும் ஊரிலுள்ள கோர்திதத் தொழிலகமாகும். காட்டேரி ஆறு பின்னர் குன்னுரர் ஒடையிற் கலந்து இறுதி யில் பவானி ஆற்றில் கலக்கிறது. காடுகள் : நீலமலை மாவட்டத்திலே 577.885 சதுர மைல் பரப் புள்ள காடு உள்ளது. இது, ஏறத்தாழ மொத்தப் பரப்பள விலே பாதியாகும். இக்காட்டிலே 45 சதுர மைல் பரப் புள்ளது அரசினரின் காடாகும். கூடலூர் வட்டத்திலே தனிப்பட்டவர்கட்கும் காடுகள் உண்டு. இக் காட்டிலே தேக்கு மரங்கள் செறிந்துள்ளன. உதகையின் கிழக்குச் சரிவிலே சந்தன மரங்கள் அடர்ந்துள்ளன. உதகை வட்டத் திலும் பச்சைப் பசும் புல்வெளிகள் பரந்துள்ளன. நீர்ப்பாசனத் திட்டங்கள் : - மலைவளங் கொழிக்கும் நீலமலை மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே அனேக் கட்டுதல் எளிதன்று. எனவே குறிப்பிடத் தக்க அணைக்கட்டு எதுவுமில்லை. மழையின் உதவியால் கூடலூர் வட்டத்தில் நெல் பயிரிடப்படுகிறது. குன்னூர் வட் டத்தில் மோயார் ஆற்றின் கால்வாய் மூலம் பயிர் செய்யப் படுகிறது. இந்த மாவட்டத்தில் பஞ்சம் வருவது அவ்வளவு எளிதன்று. விளைபொருள்கள்: நீலமலை மாவட்டத்திலே பலவிதமான பொருள்கள் பயிர் செய்யப்படுகின்றன. அவற்றுள் உருளைக்கிழங்கு முக்கியமான உணவுப்பொருளாகும். தேயிலை, காபி, இரப்பர், கொயின ஆகியனவும் இந்த மாவட்டத்திலே விளேகின்றன. சம்பாக்கோதுமையோடு பழங்களும், குளிர்காலக் காய்கறி களும் இங்கே பயிராகின்றன. இவையிரண்டும் அதிகமாக