பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்படாக் கரடுமுரடான மண் நிலங்களாக உள்ளன. இதல்ை, இவற்றைப் பண்படுத்தப் பல செயற்கை முறை களேக் கையாள வேண்டியுள்ளது. சுண்ணும்புச் சத்து இங் நிலத்தில் மிகவும் குறைவு. ஆதலால் மழையில்லாத வரட்சி யான காலத்தில், பல விதமான செயற்கை முறைகளால் நிலத்தை வளமாக்கிப் பயிரிடப்படுகிறது. ஆறுகள் : நீலமலை மாவட்டத்திலே எங்கு நோக்கினுலும் பளிங்கு ஓடைகளும், கண்ணுடி ஊற்றுக்களும் நிறைந்து தோன்றும். அவை யெல்லாம் நிலவொளியிலே பாலாறுகள் போலவும், கதிரொளியிலே பொன்னுேடைகள் போலவும் ஒளிரும். அத்தனை ஓடைகளும் கிழக்கு நோக்கிப் பாய்கின்றன. ஒன்று, நீலமலை மாவட்டத்துக்கு வடக்கே உள்ள மோயாரிலே விழு கின்றது ; தெற்கே உள்ள பவானியிலே சென்று சேருகின்றது. நீலமலை மாவட்டத்திலே ஒடும் சிறந்த நான்கு ஆறுகள் பைக்காரா, சேகாறு, குண்டாறு, காட்டேரி யாறு ஆகியவையாகும். இவற்றுள்ளே மிகவும் நீண்ட ஆறு பைகாரா ஆறே. இந்த ஆற்றின் குறுக்கே மூன்று அணைக் கட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ஆற்றிலிருந்துதான் மசினகுடிப் பகுதியில் உள்ள சிங்காரம் என்னும் ஊரில் அமைக்கப்பட்ட ஆற்றலகத்துக்குக் (Power House) குழாய் மூலம் நீர் கொண்டு செல்லப்படுகின்றது. அந்த் ஆற்றலகத்தினுல் தமிழ் நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் மின் சக்தி பெறுகின்றன. சிங்காரத்திற்கு அப்பால் 11 கல் தொலைவிலுள்ள மோயாரிலே மற்ருேர் ஆற்றலகம் அமைக் கப்பட்டுள்ளது. அங்கிருந்தும் மின் சக்தி ஏனைய இடங்: கட்குச் சிங்காரம் மூலம் வழங்கப்படுகிறது. யார் என்பது பைகாரா ஆற்றின் அடிப்பகுதிக்குரிய பெயராகும். சேகாறு (Segur) நீலமலை மாவட்டத்தின் GQJL எல்லை வரை சென்று, பின் மோயார் ஆற்ருெடு கலக்கிறது. மற்ருெரு சிறப்புடைய ஆறு குண்டாறு என்பதாகும். இந்த ஆற்றின் தொடர்பானதுதான் குண்டாத் திட்டமாகும். திட்ட