பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 7 --- நீலமலை மாவட்டத்திலே ஆண்டு முழுதும் மழை பெய் வது இல்லை. அம் மாவட்டம் அவ்வளவு உயரத்தில் இருந்த போதிலும், அங்கும் மழையே பெய்யாத காலமும் உண்டு. அது மட்டுமல்ல; கதிரவனே தெரியாத காலமும் உண்டு. சன வரி மாதம் முதல், மார்ச்சு மாதம் வரை மழை ஒரு துளி கூட வானத்திலிருந்து விழாது. ஏப்ரல், மே மாதங்களில் அழகான சாரல் பெய்யும். அப்பொழுது நாம் வெளியே சென்ருல் நம்மீது மழைச் சாரல் விழுவதாக உணரமாட்டோம்: முல்லேப் பூக்கள் உதிர்வதுபோல நம் உடல் உணர்ந்து பூரிக்கும். அகங் குளிர்ச்சியடையும். சூன், சூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களிலும் தென் மேற்குப்பருவக் காற்றில்ை அதிகமாக மழை பெய்யத் தொடங்கும். இந்த மழை, கூடலூர் வட்டத் தில்ே கடுமையாகப் பெய்த போதிலும், கிழக்கே போகப் போக, இம் மழையின் வேகம் குறைகிறது. அக்டோபர் மாதத்திலே தான் ஊழிக் காலம் போல அடை மழை பொய்கி கிறது. இக் கடுமையான அடை மழைக்குக் காரணம், வட கிழக்குப் பருவக் காற்றே. கிழக்குத் தொட்ட பெட்டாவிலே காற்றும் மழையும் மிகவும் கடுமையாக இருக்கும் திக் கெட்டும் இடி முழக்கம் கேட்கும். இக் காலத்திலே கூடலூர் வட்டத்தில் மட்டும் 124.35 அங்குல மழை பெய்யும். ஆளுல் உதகை வட்டத்திலே 64.39 அங்குலமும், குன்னூர் வட்டத்திலே 6 1.3 அங்குலமும்தான் மழை பெய்யும். எனி னும் இதுவும் அதிக மழையே. உதகையின் உயர்ந்த வெப்பம் 75° F) குறைந்த வெப்பம் 30° F என்பனவாம். குறிப் பிடத்தக்க மலை நகரங்களுள் உதகையும் ஒன்று. அது ஒரு சிறந்த நோய்போக்கி ஆகும். கோடை காலத்திலே அங்கே வெள்ளம் போல் மக்கள் கூட்டம் வந்து கூடும். உதகை மட்டுமல்ல ; குன்னுரர், கோதமலே, (கோட்டகிரி) என்ற வேறு நல்லூர்களும் அங்கே உள்ளன. நிலவளம் : * - நீலமலை மாவட்டம் கரிசல்மண், செம்மண், காவிமண், மஞ்சள் மண் ஆகிய நான்குவித மண்களைப் பெற்றுள்ளது. - H ■ ■ - – • * - -*. o ". . - * - * , == i ஆல்ை, ஒரு மண்ணுவது பண்பட்ட மணணலல: எலலாம