பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நீலமலை மாவட்டம் மலைகள் நிரம்பிய மாவட்டமாகும். எங்கு நோக்கினும் மஞ்சு கண் துஞ்சும் மலைகளே காட்சி யளிக்கும். உயரத்தை அடிப்படையாகக் கொண்டு நோக்கின் நீலமலை மாவட்டத்தை இரு பிரிவாக்கலாம். கடல் மட்டத்திலி ருந்து 6500 அடி உயரத்தில் உள்ள பகுதி, 3000 அடி உயரத்தில் உள்ள மற்ருெரு பகுதி. முதலில் உள்ள நீல மலைப் பகுதியின் நீளம் 35 கல்; அகலம் 20 கல். இந்த மலேச் சரிவே மேற்குத் தொடர்ச்சி மலையும் கிழக்குத் தொடர்ச்சி மலேயும் சந்திக்கும் இடமாகும். அடுத்த பகுதி தென் கிழக்கில் உள்ள வய நாடாகும். இதுவும் ஒரு மலைச் சரிவே. இப்பகுதி தெற்கிலும் தென் கிழக்கிலும் சரிந்துள் ளது. இந்த வய நாட்டைத் தென் வடலாகச் செல்லும் மலைத் தொடர் ஒன்று இரு பகுதியாகப் பிரிக்கிறது. இந்த மலைத் தொடரிலே உள்ள சிகரங்களுள் மிகவும் உயர்ந்த சிகரம் தொட்ட பெட்டா என்பதாகும். இதன் உயரம் 8.650 அடியாகும். இந்தச் சிகரம் உதகையிலிருந்து கிழக்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. தொட்ட பெட்டாவுக் கருகிலே வேறு மூன்று சிகரங்களும் உள்ளன. அவற்றின் உயரம் 8000 அடியாகும். குளுவ மலே, ஏலக்கா மலை, பனிமலை என்பன அச் சிகரங்களின் பெயர்களாம். வய நாட்டுக்கு வடபால், பெண்ணே, முதுமலே எனும் அடர்ந்த காடுகள் இரண்டு உள்ளன. கால நிலை : நீலமலையின் காலகிலே உடலுக்கு மட்டும் மல்ல, உள் ளத்துக்கும் உகந்ததாகும். இளேத்த உடலைத் தேற்றும் வன்மையும், களேத்த உள்ளத்துக்குச் சுறுசுறுப்பூட்டி மகிழ்ச்சிதரும் தன்மையும் நீலமலைக்கு உண்டு. இதன லேயே வாழ்க்கைச் சுழலிலே சிக்கிச் சோர்வுற்ற செல்வர் களும், அரசியலிலே ஈடுபட்டு அலுத்த அரசியல் வாதிகளும் இந்த நீலமலைக்கு வருகிருர்கள் : துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெற்றுத் தெம்பும் தெளிவும் அடைந்து செல்லு கிருர்கள். a * * * -