பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலை வாழ் மக்கள் 1. மலையரசி தோற்றுவாய் : தென்னடு ஒரு பொன்னடு. அப் பொன்டுை மலைகள் சூழ்ந்த ஒரு நன்டுை. மலேகளிலே எழிலும், பொழிலும், ஏற்றமும், தோற்றமும் பெற்ற மலே நீலமலை. அம்மலையே மலைகளின் அரசியாகவும் திகழ்கிறது. நீல மலையைத் தெரியாத தமிழ் மக்கள் இரார். ஏன் ? இந்தியப் பெருநிலம் முழுமையுமே நீலமலையின் பேரும் புகழும் வெகுவாகப் பரவியுள்ளது. வெளிநாடுகளுக்கும் இதன் அருமையும், பெருமையும், சீரும், சிறப்பும் எட்டி யுளளன. நீலமலையின் இருப்பிடம் : நீலமலை மாவட்டத்தின் தென் எல்லையாகக் கோவை மாவட்டமும், மலையாள நாடும் அமைந்துள்ளன. மலையாள மாவட்டம் மேல் எல்லேயாகவும் கோவை மாவட்டம் கீழ் எல்லையாகவும் விளங்குகின்றன. வட எல்லைகளாக மைசூர் நாடும், கோவை மாவட்டமும், மலையாள நாடும் அமைந்து அணி செய்கின்றன. - - o நீலமலை மாவட்டத்தின் பரப்பளவு 982 சதுர மைல் களாகும். இந்த மாவட்டத்திலே உள்ள வட்டங்கள் மூன்று. அவை கூடலூர், உதக மண்டலம், குன்னுார் என்பனவாம்.