பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. தோதவர் தோதவர் Այm ii ? நீலமலைச் செல்வர்களிலே நம் கண்ணேயும் கருத்தையும் கவரும் தோற்றமும், தொழிலும் உடையவர்கள் தோதவர் (Todas) என்ற ஒரு குடியினராவர். தோதவர்களின் பார்வை யிலே ஒரு தனிக் கவர்ச்சி மிளிரும். உடற்கட்டிலே ஒரு தனி அழகு ஒளிரும். இவர்கள் படகர்களே விடக் கொஞ்சம் குள்ள மானவர்கள். தோதவர் இனம் தோன்றிய வரலாறு எவரும் அறியாத மறைபொருளாக உள்ளது. பேராசிரியர் டாக்டர் இரிவர் (Dr. River) தோதவர்கள் மலையாளத்தைச் சேர்ந்தவர்கள் என்ருர். ஐரோப்பிய அறிஞர்கள் தோதவர்களுடைய மூக்கு உரோமர்களுடைய மூக்கைப் போன்றுள்ள தென்றும், எனவே அவர்கள் உரோமானியர் பரம்பரையினராகலாம் என்றும் கருதினர். ஆல்ை, இவை யிரண்டும் தத்தம் உத்திக் கூற்றுக்களாகும். இனி, தோதவரின் வாழ்க்கை முறை, உடை முதலியவற்றைப் பார்ப்போம். ஆடை-அணி : தோதவ ஆண் மக்களில் பலர் இன்று தம் பழங்கால உடை வகைகளேயும் பழக்க வழக்கங்களையும் வெறுக்கின் றனர். தோதவ முதியோர் தலைப்பாகை அணியார்: முடி யினை ஒருவகையாகக் கத்தரித்துக்கொள்வர். ஆல்ை, நீண்ட தாடி வைத்துக்கொள்வர். இம்மூன்றையும் தற்காலத் தோதவ இளைஞர்கள் வெறுக்கின்றனர். அவ்விளைஞர்கள் இப்பொ ழுது தலையை நன்கு அழகுபடுத்திக் கொள்கின்றனர்: தாடியைச் சிரைத்துவிடுகின்றனர்: தலைப்பாகை அணிந்து கொள்கின்றனர். இதல்ை அவர்களும், படகர்களும்,