பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3 கோதர்களும் ஒன்று போலவே காட்சி அளிக்கின்றனர். ஆனால், உடுக்கும் உடையிலே தோதவர்கள் பிற குடிகளேவிட வேறுபடுகின்றனர். தோதவர்கள் புதுக்குளி (Putukuli) என்ற ஒருவகை உடை உடுக்கின்றனர், புதுக்குளி' என்பது முரட்டுத் துணியாலான உடையாகும். வெளுத்த பின்னர் இவ்வாடை சிவப்புக்கரைகளுடன் வெண்மையாகப் பொலிந்து தோன்றும். இக்காலக் கிராமப்பெண்கள் சேலை உடுப்பது போன்று இவர்கள் உடை உடுக்கின்றனர். ஆனால், இவர்கள் அணியும் உடை, முட்டுக்கு மேலேதான் இருக்கும். இவர்கள் உடை உடுக்கும் முறை ஏறக்குறைய உரோமர் முறையை ஒத்திருக்கிறது. பெண்கள், ஆடவர் உடையணிவதுபோல அவ்வளவு நன்ருக உடை அணிவதில்லை. தோளிலும் மார்பிலும் துணி யைச் சுற்றிக்கொள்வர். பெண்டிர்கள் கனமான தோள்வளே களே அணிகின்றனர். தோள் வளைகள், தோள்வடி, துவகி எனத் தோதவர் மொழியிலே கூறப்படும். இந்தத் தோள் வ8ளகளேச் செய்பவர்கள் தோதவர்கள் ஆவர். சிலபோழ்து தோதவப் பெண்டிர் ஒரே கையில் இரண்டு தோள்வளைகள் அணிதலும் உண்டு. இதிலே பெரிய வளே மூன்று பவுண்டு எடையும், சின்ன வளே ஒரு பவுண்டு எடையும் கொண்டவை ILMTo5 ேேன், இரு வளைகளுக்கும் இடையில் மற் ருெரு வளையும் அணிவதுண்டு. அவ்வளே நீலமலையிலிருந்து கிடைக்கும் ஒருவகைப் பிசினும் பருத்தியும் கலந்து செய்யப் படுவதாகும். இந்த வளைகள் பழுதடைந்தாலொழிய கழற் றப்படுவதில்லை. நீலம8லப் பிசின் இழையிற் கோத்த கண்ணுடிச் சங்கிலிகளேயும் அவர்கள் அணிகின்றனர். இந்தக் கழுத்தணிகளிலே கருப்பு, சிவப்பு என்ற இருநிற அணிகள் உண்டு. கருப்பணி கெசவாடி என்றும், சிவப்பணி நேர் பல்லி என்றும் அழைக்கப்படும். விரலிலே வெள்ளி மோதி ாம், தொடையிலே வெள்ளி வளைகள் அணிவதும் உண்டு. அவர்கள் காதில் அணியும் மோதிரம் "காவ்த்திரியாத்' (Kaftriath) என்று தோதவர் மொழியில் அழைக்கப்படும். இடது கை மணிக்கட்டிலே இப்பால் என்னும் இரும்பு