பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வளைகள் அணிதல் உண்டு. இவற்ருேடு தாக்கார் என்னும் துத்தநாகச் சங்கிலியும் அணிவதுண்டு. - தோதவப் பெண்டிர்கள் மேனி மிகவும் மென்மையாக இருக்கும். அவர்கள் தோற்றத்திலே பொலிவும் அழகும் போட்டியிடும். ஆடவர் முடியைவிடப் பெண்டிர் கூந்தல் சற்று வெளிறிய நிறமுடையதாக இருக்கும். நேர் உச்சி எடுத்துச் சீவிச் செவிகட்குப் பின்புறமாகத் தங்கள் தலையை நீவி விடுவர். வாரிவிடப்பட்ட கூந்தல் அவர்தம் மூங்கிலே யொத்த தோள்மீது சுருண்டு புரண்டு கொண்டிருக்கும். இக் காட்சி கருத்தைக் கவரும். அவர்தம் தலை ஒப்பனையிலே (Mack-up) தனிப்பொலிவுண்டு. தலை ஒப்ப&னயின் பொருட்டு நாள்தோறும் குறிப்பிட்ட அளவு நேரத்தைச் செல விடுவர். தோதவர் செல்வம் : தோதவர் எருமை மாடுகளேயே-செல்வமாகக் கருது கின்றவர்கள். அவர்கள் வாழ்வே மாடுகளின் வாழ்வோடு பின்னிப் பிணேந்ததாகும். அவர்கள் வாழ்வு நாடோடி வாழ்வாகும். அவர்கள் நிலத்தை உழுது வாழ்தலைத் தாழ் வாகக் கருதுகிருர்கள். நீலமலைச் செல்வர்களிலே இவர்கள் தாம் மாட்டுப்பண்ணை வைத்துள்ளனர். இதல்ை பாலே மிக அதிகமாகக் குடிப்பது அவர்களது வழக்கம்போலும். ஆண்டில் சில குறிப்பிட்ட பருவங்களில் இவர்கள் தங்கள் மாடுகளோடு ஒவ்வோர் இடமாகச் சுற்றிவருவார்கள். தோதவப் பெண்டிர்கள் பருவம் அடைந்த பின் பச்சை குத்திக்கொள்வார்கள். சுள்ளி விறகுகள்மூலம் நெருப்பு உண்டாக்கப்படும், பல கணவன் மணம் : தோதவரிடையே ஒரு பெண் பல கணவர்களே மணம் செய்துகொள்ளும் வழக்கம் நிலவுகிறது. இவ்வழக்கம் நெடு நாளாகவே இருந்து வருகிறது போலும். கருத்தறித்த ஏழாவது மாதத்திலே அதற்குரிய சடங்குகளைச் செய்பவன்ே