பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 ஆரூவர் புரிநூல் அணிந்துள்ளனர். இன்று, ஆரூவர் படக ரோடு நன்கு கலந்து விட்டனர். பழுத்த வைதீக வெறியுடைய இவ் வாரூவர் குருமாராகவும் இருகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது. அதிகாரிகள் : அதிகாரிகள் மரக்கறி உணவு உண்பவர்கள். கணக் கரும் படகரும் இறைச்சி உண்பர். மரக்கறி உண்ணும் அதிகாரி, இறைச்சி உண்பவர் வீட்டில் பெண் எடுத் தால், அவனும் இறைச்சி உண்ணத் தொடங்கி விடுவான். கணக்கர் : 壟 கணக்கர் என்போர் கணக்கெழுதுவோர் ஆவர். நீல மலேயைத் தமிழ்த் தலைவர்கள் ஆளும்போது இவ் வகுப்பினர் தோன்றியிருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். தொரியாக்கள் : படகர் பிரிவினுள்ளே இப்பிரிவினரே தாழ்ந்த இனத் தவராகவும், உயர்ந்த இனத்தார்க்கு ஊழிய்ம் செய்வோராக வும் கருதப்படுகின்றனர். இவர்கள் படகர்க்கு அடிமை வேலை செய்வர். பிணத்தைத் தூக்கிச் செல்லல், இழவுச் செய்தியை ஊர்தோறும் சென்று சொல்லி வருதல் முதலிய அவ்வளவு வேலைகளையும் தொரிய மகனே செய்தல் வேண் டும், யாரேனும் இறந்து விட்டால் முதலில் தொரியா மகனே தன் தலையை மழித்துக் கொள்வான். அக்கம் பக்கத்து ஊர்களுக்குச் செல்லும், பெண்டிருக்கு வழித் துணேயாகச் செல்வோரும் இவர்களே. இத்தகைய வேலைகள் செய்வதால்தானே என்னவோ, எல்லோரும் தொரியாக் களேத் தம் மக்கள் போலக் கருதினாலும், அவர்களோடு கொள்வினையோ கொடுப்பினையோ செய்து கொள்வதில்லை. 'உடையாரும் அதிகாரிகளும் இலிங்காயத்து நெறி யினர். ஏனேய மூவரும் சைவர். உடையார், பிறரோடு மனஉறவு கொள்ள மாட்டார்கள். தொரியா மக்கள் இவ் வுறவு பற்றிக் கனவுகூடக் காணமுடியாது: காணக் கூடாது.