பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கூடாதாம். படக ஆடவரை இவ்விருவரும் தொட்டால் திட்டாம். எனவே, தீட்டுப்பட்ட படகன், குளித்துவிட்டுத் தான் பாலறையுள் நுழைய வேண்டுமாம். படகர் வீடு ஒவ்வொன்றினுள்ளும் ஒரு பரண் அமைக்கப்பட்டிருக்கும். அப்பரண் மூங்கிலால் அமைக்கப் பட்டிருக்கும். அப்பரணில் படகர்கள் தம் பொருள்களே வைத்துக் கொள்வர். சுத்துக்கல்-மங்தைக்கல் ஒவ்வோர் ஊரிலும் மேடைகள் உண்டு. அவை கல்லாலோ மண், கம்பு ஆகியவற்ருலோ அமைக் கப்பட்டிருக்கும். முன்னதற்குச் சுத்துக்கல் என்ற பெயரும், பின்னதற்கு மந்தைக் கல் என்ற பெயரும் உண்டு. படகர் கள் இந்த மேடைமீது இருந்து பொழுது போக்குவார்கள். இக் கல்மேடைகளைப் பற்றிய நாடோடிக் கதைகள் படக மக்களிடையே வழங்குகின்றன. வேற்றவர் வருகையை இம்மேடைமீதிருந்து ஊருக்கு அறிவித்தல் என்பது அக் கதைகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளும் உண்மை. ஒலியா: படகர்கள் வேற்றவருக்கு இட்ட பெயர் ஒலியர் என்ப தாம். எருமை நாடாகிய மைசூரிலிருந்து, குடகுப் பகுதியில் வந்து குடியேறிய கீழ் ஒலியர் வகுப்பினரே இந்த ஒலியர் என்பது அறிஞர் அரிச்சடர் கருத்து. மாடுகள்: படகர்கள் தம் வீட்டு முற்றத்திலேயே தானியங்களே உலர்த்தி, இடித்துப் பக்குவப் படுத்துகின்றனர். இவ்வழக் கம் இன்றும் சிற்றுார் பலவற்றில் இருக்கக் காண்கின்ருேம். ஆடுமாடுகளே அடைக்கக் கல்லாலான தொழுவங்கள் வைத் திருக்கின்றனர். அருகிலுள்ள குடிசைகளும் தொழுவமாகப் பயன் படும். ஆடுமாடுகளின் எரு ஒரளவுக்கு நிறைந்ததும், அது நிலங்கட்கு எடுத்துச் செல்லப்படும்.