பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 's -* தோலும், எடுப்பன மார்பும், வலிமைமிக்க தோள்களும் , உடையவகை அவன் தோன்றுவான். படகர் கைகளில் கம்பிகளால் குடு போடப்பட்டிருக்கும். . இது, பால் கறக்கும் போது வலி தோன்ருதிருக்கும் படி செய்வதற்காக என்று சொல்லப்படுகிறது. படகரைப் போன்றே தோதவரும் இச்சூடு போடல் வழக்கமாம். இவ்வாறு சூடு போட்டுக் கொண்ட்வர்கள் அச்சமின்றி எளிதாக எருமைகளை அணு அடக்கி முடியும் என்பது படகர் எண்ணம். - விடுகள் : - - - படகர் வாழ்கின்ற ஊர்கள் பரந்த சிற்றுார்கள். ஆல்ை, அவை குன்றின் மேல் அமைந்தவை. படகர் விடுகள் கீற்றுக்களாலோ அல்லது ஒடுகளாலோ வேயப் பட்டிருக்கும். வீடுகள் வரிசையாய் இருக்கும். இவற்றைச் சுற்றிக் கட்டுக் கலம்தரும் கதிர் வயல்கள் இருக்கும். படகர் வீடுகள் தனித்தனியான கூரையுடையன அல்ல. உணவு விடுதிகள் போல அவர்கள் வீடுகள் அமைந் திருக்கும். அதாவது, பல வீடுகளுக்கும் சேர்ந்து ஒரே கூரை இருக்கும். ஆனால், இடையிடையே சுவர்கள் வைத்து அறை அறையாக அமைக்கப்பட்டிருக்கும். ஒவ் வோர் அறையிலும் ஒரு குடும்பம் வாழும். இத்தகைய வீடுகள் இன்றும் பல சிற்றுரர்களில் கணப்படுகின்றன. இத்தகைய இரு பெரும்வீடுகளே (Block) இருபுறமும் கொண்டது ஒரு தெரு எனப்படும். ஒவ்வொரு சிறு விட்டிலும் இரண்டு பகுதிகள் இருக்கும். அவை முன்வீடு, பின்விடு என்பனவாம். இவை முறையே எடுமனே, உள்ளகா அல்லது ஒகமனை எனப் படகர் மொழியில் அழைக் கப்படும். இவை இரண்டிலே உள்ளகா என்பதை உள்ள கம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபாகக் கொள்ளலாம். உள்ளகத்தின் ஓர் அறை ஆகோடு எனப்படும். இவ்வறை யில் பால்படு பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். இவ் வறைக்குள் பெண்டிர் செல்லக்கூடாது என்பது படகர் கொள்கை. இது மட்டுமல்ல, தீண்டாதவர் எனக்கருதப் படும் கோத்தவரும் பறையரும் அவ்வறையருகில் வரக் o, --" -1