பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பச்சைகுத்தல் : - m பச்சைகுத்தல் என்பது இன்று பல கிராமங்களில் உண்டு. நெற்றியில் கோடுபோல அமைந்த புள்ளிகள் வட்டங்கள். பிறைகள் முதலியவற்றையும், தாடையில் ஒரு புள்ளியையும் படகப் பெண்டிர் குத்திக்கொள்வர். வலது முன்கையில் ஒரு விண்மீன் போன்ற உருவில் பச்சைகுத்தல் உண்டு. இதே விண்மீன் நெற்றியிலும், மேற்கைகளிலும் குத்தப்படும். பின்கையில் கதிரவன், விண்மீன் பச்சைகளும், இடதுமணிக்கட்டின் முன்னும் பின்னும் மூன்று வரிசை களாகத் தொடர்ந்த புள்ளிகளும், மார்பைச்சுற்றி இரு வரிசைகளும் குத்தப்படும். • துரியா சாதிப் பெண்டிர் மட்டும் மணிக்கட்டில் வளையல் அணியலாமாம். உதயர்இனப் பெண்டிர் நெற்றிகளில், தொடர்ந்த பசும் புள்ளிகளும் ஒரு பிறையும் இருக்கும். விழிகளுக்கு மேலாக வெளிமூலைகளில் நீண்ட கோடுகள் இருக்கும். மற்ற குடும்பப் பெண்டிர் நெற்றிகளில் இரு வட்டங்கள், நடுவில் நேரான வெட்டுடன் இருக்கும். மேலும் செங்குத்தான அல்லது பிறைவடிவான ஒரு வெட்டு அடிப் பகுதியில் இருக்கும். மோதிரங்களே அழுத்துவதால் இப் படி வட்டங்கள் உண்டாகின்றன. பச்சை குத்தம் தொழில் படகப் பெண்டிருக்கும், குறத்திக்கும் உரியதசிற்று. பச்சை எப்படிக் குத்துவது ? முதலில், கரித்துள் மையால் கோடுகள் வரையப்படும். பின்னர் ஊசி கொண்டு அக்கோடுகளின் மேல் குத்தப்படும். இதனால் கோடுள்ள பகுதிகள் வீங்கித் தோன்றும். பின்னர் மஞ்சற்பொடியும் விளக்கெண்ணெயும் சேர்ந்த காரம் அதன்மீது போடப்படும். இப்படித்தான் பச்சை குத்துவது. நெற்றிப்பச்சை ஏழு அல்லது எட்டிவது ஆண்டில்தான் குடு: " . - உடல் அமைப்பில் படகன் நடுத்தர் உயரத்துக்கும். குறைவான உயரமுடையவனே. என்ருலும் மென்மையான்