பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 உடனே அவன், பார்பட்டிக்காரனின் தாள்களில் விழுவான். பார்பட்டிக்காரன், அவனைத் தூக்கி நிறுத்தி நெற்றியில் நீறுபூசி விடுவான். மேலும், கன்னிக்கட்டு எனப்படும் பிள்ளைப்பேற்றின் போதும் பார்பட்டிக்கரன் இருக்கவேண்டும். படகர் உடைகள் : பத்து இருபது ஆண்டுகட்கு முன்னல் தலைப்பாகையைக் கொண்டு படகனே அடையாளம் கண்டுவிடலாம். இன்ருே காலம் மாறிப்போய்விட்டது. இக்காலத்திலே தோதவரும் இருளரும் பிறரும் கூடத் தலைப்பாகையும் கோட்டும் அணிய லாயினர். இதுகண்ட கல்லூரி மாணவர்கள், பாகைகளே நீக்கித் தொப்பிகளே அணியலாயினர். படக முதியவர்கள், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமைந்த பின்னல் தொப்பிகளே அணிகின்றனர். ஆடவர் நீண்ட மேல் வேட்டி அணிவர். வயல்களில் வேலை செய்யும் பொழுது, அந்த மேல் வேட்டியை மடித்துத் தோளில் போட்டுக் கொள்வர். பெண்கள் வெண்மையான மேலாடை ஒன்றும், முழந்தாள் வரை தொங்கும் உள்ளாடை ஒன்றும் தலையில் தொப்பி போன்ற துணிக்கட்டும் அணிவர். `ತ್ರಿ' ಏು | அணிகள் இ ஆடவர் காதணிகள் ஒரு தனிச் சிறப்புடன் பொன்னல் செய்யப்படுகின்றன. வெள்ளியாலான அரைநாண், மணிக் கட்டுவங்கி, வெள்ளியும் பித்தளேயும் கலந்து செய்யப் பட்ட மோதிரங்கள் ஆகியன ஆடவர் அணிவகைகள். பெண்டிர் அணியும் அணிகள் : இடது மூக்கில் மூக்குத்தி, வெள்ளியாலான நான்கு வளைகள், பல உலோகங்களாலான பதினேரு வளைகள் ஆகியன இடது முன்கையில் அணியப்படும். இடது கை மோதிரவிரலில் இரு எஃகு மோதிரங்களும், வலது கை மோதிரவிரலில் இரு வெள்ளி மோதிரங்களும் அணியப்படும்.