பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அல்லது ஆலமரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு வழக்கை ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவர். இத்தீர்ப்பின் போது தண்டம் , விதிக்கவும், சாதியைவிட்டு ஒதுக்கி வைக்கவும், திரும்பச் சேர்க்கவும் இவர்கட்கு உரிமை உண்டு, மணியக்காரன் தீர்ப்பே முடிவானது. திருமணம் போன்ற காரியங்களைக் கூட மணியக்காரனிடம் கலந்தே செய்தல் படகர் வழக்கம். தொடக்கத்தில் மணியக்காரனின் அட்ட காசம் தலைவிரித்தாடியது. ஊரிலே நல்ல பெண்களைக் கண்டால் போதும் , அவ்வளவுதான். அந்தப் பெண்கட்குப் பிடித்தது சனி. அவர்கள் வாழ்வே பாழாகிவிடும். இம் மணியக்காரர் மது, மாது இரண்டிலேயே முழுகி இருந்தனர். இக்காலத்தில் மணியக்காரர் ஒரளவுக்கு நாகரிகம் அடைந்து விட்டனர் என்னலாம். படகர்குலம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தலைவனே உடையது. அவனுக்கு, கெளடன் என்று பெயர். கெளடன் என்பதுதான் கெளண்டன் எனப் பிற்காலத்தில் மாறி யதோ என்று எண்ணவேண்டியுள்ளது. இத்தலைவனுக்குத் துணையாக விளங்குபவன் பார்பட்டிக்காரன். இவ்விருவரே வழக்குகளைத் தீர்ப்பார்கள். தண்டப் பொருள்களைக் கொண்டு விருந்தோ பூசனையோ நடத்துவார்கள். வழக்கிலே சத்தியம் செய்யவேண்டும். சத்தியம் செய்தால் வழக்கு முடிந்துவிடும். இவ்வழக்கம் இன்றும் பல சிற்றுார்களில் நிலவுவது குறிப்பிடத்தக்கது. - இத்திச்சாமி, தீவி, வயிராகுனித் திருவிழா, கோனக் கூரில் நடக்கும் எருமைப் பலிவிழா முதலியவற்றில் எல்லாவற்றையும் செய்து முடிக்க வேண்டிய பொறுப்பு பார்பட்டிக்காரனைக் சேர்ந்ததாகும். சிறைவீடு செய்தல் போன்றனவும் அவன் வேலையே. - தள்ளி வைத்தவர்களே மறுபடியும் சாதியில் சேர்த்துக் கொள்ளும் முறை வியப்பானது. தள்ளி வைக்கப் பட்டவன் கோயிலுக்கு அழைத்துச் செல்லப்படுவான். கோயில்முன் படகர்கள் கும்பலாக நிற்பர். பார்பட்டிக் காரன் ஒரு கம்பால் அவன் தலையைத் தொடுவான்.