பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 | பெற்ற குழந்தைகட்கும், கொண்ட கொழுநனுக்கும் நல்ல சோற்றை அன்போடு அளிப்பாள். என்னே தாயுள்ளம்! எத்தகைய பெண் உள்ளம்: . - படகன் காசாசை பிடித்தவன்; எனவே, நிலத்தின் அறுவடை நாளாக இருந்தபோதிலும், காசு தரும் பிற வேலை யையே விரும்பிச் செல்லுவான். படகன் பெரும்பாலும் காபி, தேயிலேத்தோட்டங்கட்கு வேலை செய்ய ஒடிவிடுவதால், வீட்டிலும் வயலிலும் வேலே செய்வோர் படக நங்கையரே. இத்தகு உழைப்பாளிகளாக இருப்பதாலேயே படக மணப் பெண்ணுக்கு 150 முதல் 250 ரூபாய்வரை பரிசம் தரப் படுகிறது. வயல் வேலே முடிந்தபின்னர், உள்ள காலங் களில் உரம்சேர்த்தல், நிலத்தைக் கிளர்தல் முதலிய வேலைகளே அவர்கள் செய்வர்கள். மணியக்காரர் : நாலேந்து குழந்தைகள் உள்ள வீட்டில் ஒரு குழந்தை மட்டும் அடம்பிடித்து அதிகாரம் பண்ணுமானல், ' என்னடா மணியம் பண்ணுகிருய் ?' எனக் கேட்பதை நாம் அறிவோம். மணியம் எனும்சொல் இதிலிருந்து அதிகாரம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது என்று உணரலாம். எனவே மணியம் பண்ணுபவர் மணியக்காரர் என்று அழைக்கப்படுவர். படகளிடையே அதிகாரம் பண்ணு பவன் மணியக்காரன் என அழைக்கப்படுவான். மணியம் பண்ணும் பதவி, பணம்படைத்தோர், ஆள் அம்பு உடை யோர் ஆகியோருக்கே கிடைக்கும். பின் இப்பதவி பரம் பரைச் சொத்தாகி விடும். மணியக்காரனின் சின்னம் வெள்ளி மோதிரமாகும். பின்வரும் பரம்பரையால், நல்ல நாளில் இந்த மோதிரம் எடுத்து வைக்கப்பட்டுக் கும்பிடப் படும். மணியக்காரன் தன் அதிகாரத்துக்குட்பட்ட ஊர்களில் நடக்கும் அத்தனை நிகழ்ச்சிகளுக்கும் பொறுப்பாளனுவான். ஊர்களில் எழும் வழக்குகள் அத்தனையையும் திர்ப்பவன் இவனே. சிக்கல்மிக்க வழக்கானல், ஊர்ப்பெரியவர் சிலரையும் கூட்டிக் கொண்டு ஊர்வாயிலில் உள்ள வேம்பு, шо&p—3 ---