உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வரும். இருள் கவியும். ஆடுமாடுகளே ஒட்டிக்கொண்டு வீடு வருவான். தன் குலதெய்வம் என அவன் எண்ணும் விளக்கை நோக்கிக் கைகூப்பி, இந்த உலகையும் பிற உலகையும் படைத்தவரே! பெரும் பொருளே! எம் துன்பத்திலும் இன்பத்திலும் பங்கு கொள்வோரே! எம் கால்களே முள்ளிலிருந்து காப்ப வரே ! பல்லாயிரக்கணக்கான மக்களிடையே நாங்களும் ஒளியுடன் உலவுமாறு காப்பாற்றுவீராக " என்று சொல்லி வணங்குவான். படக நங்கையர் : படக நங்கையர், உழைப்பின் உறைவிடம்: அன்பின் பிறப்பிடம்: தொண்டின் சுரங்கம். வாழ்க்கைத் துணை நல்ம் என்ற அதிகாரத்திலுள்ள குறள்மணிகட்குத் தகுந்த இலக்கியமாகத் திகழ்வர் அவர்கள். படகனின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் பொறுப்பாளி அவனது வாழ்க்கைத் துனேவியே. படகன் விட்டில் மகிழ்ச்சியும் வளமும் பொங்கவேண்டு மால்ை அவன் நல்ல மனைவியைப் பெற்றிருக்கவேண்டும். படகர் சமுதாயத்தின் சீருக்கும், பேருக்கும், செல்வச் செழிப் பிற்கும் அவர்களது பெண்களே முக்கியக் காரணம் என்று சொல்லலாம். விட்டிலும் காட்டிலும் ஆடி ஒடி வேலை செய்பவர்கள் ஆண்களல்ல; பெண்களே. ஒவ்வொரு படகனுக்கும் பொது வாகச் சில ஏக்கர் நிலங்கள் இருக்கும். அந்த நிலங்களில் வேளாண்மை செய்வது படக கங்கையே, படகன், வேறு ஏதேனும் கடின வேலைகட்காகச் சென்றுவிடுவான், வயலிலே படகப் பெண் ஒருத்தி நாளொன்றுக்கு 50 துட்டுக்கு வேலை செய்வாள்; படகனே வேறு வேலைசெய்து 10 துட்டுக்கு மேல் ஒரு சல்லிகூடச் சம்பாதிக்கமாட்டான். சொந்த நிலம் இல்லாத படக நங்கை பிறர் நிலங்களிலே வே&ல செய்வாள். வெய்யில், மழை, காற்று, கடும்.குளிர், கோடை இடி இவற்றிற்கெல்லாம் அஞ்சாமல் வேலை செய் வாள். இப்படி உழைப்பவளின் உணவு வெறுங்கூழே.