பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 35 o o அழைக்கப்படுவர். இவருள்ளே மாரி, மத்தகாவர் என்ற இரு பிரிவினரிடையே திருமணம் அதிகமாக நடப்பதால் இவர்களின் குலப்பெயர் அடிக்க்டி மாறும். வெள்ளி என் றழைக்கப்படும் கலப்பு மணக்குலம், கன்னட வகுப்புக்களான வக்காலிகர், துாரியர், குறும்பர், முதலியவற்றுள்ளும் காணப் படுகிறது. . உழுதுண்டு வாழ்வோர் : படகர்கள் நல்ல உழைப்பாளிகள். உழைத்தே வாழ்க் கையை நடத்தவேண்டும் என்று எண்ணுகிறவர்கள். காட்டை யும் மேட்டையும் திருத்தி நல்ல கழனிகளாக்குவதிலே தணி யாத வேட்கை கொண்டவர்கள். உடல் உழைப்பிலே சீன மக்களுக்கு அடுத்த இடத்தைப் படகர்கள் பெறுகிருர்கள். காடும். கடும் புதரும் நிறைந்த இடங்களைக் கண்டால்போதும். படகரின் தோள்கள் தினவெடுக்கும்; கைகள் பரபரப்படை 'யும். அவ்வளவுதான், 'பொன்விளேயும் நல்ல நிலங்களாக அவைகாட்சியளிக்கும். நிலம் பயன்தரும்வரையில் அந்த கிலத் தைச் சும்மாவிடமாட்டார்கள்: உழுதுகொண்டே இருப்பார் கள். நாளடைவில் பச்சைக் கம்பளம்போர்த்ததுபோல் பயிர் செழித்து வளர்ந்துவிடும். மலை மக்களுள் ஒரளவுக்கு அறி வும், நெஞ்சுரமும், முன்னேற்றத்தில் நம்பிக்கையும், உடல் உழைப்பும் உடையவர்கள் படகர்களே எனலாம். வேளாண் மையிலே புத்தம் புதிய முறைகளே அவர்கள் கண்டால். அவற்றை விரைந்து பின்பற்றி விளைவைப் பெருக்கத் தயங்க மாட்டார்கள். கோதுமை, பார்லி, ஈருள்ளி (ஈர வெங்காயம்) உருளேக்கிழங்கி, கீரை, சாமை, தினை முதலியவற்றை அவர் கள் பயிராக்குவர். - படகன் அதிகாலேயில் எழுவான் : கடவுளே வணங்கு வான், தொழுவுக்குச் செல்வான்; கதிர்மணியைத் தொழு வான். ஆடுமாடுகளே அவிழ்த்துக்கொண்டு, வழக்கமாகப் போகும் தரிசு நிலம் அல்லது புல்வெளிக்குச் செல்வான்: ஆடுமாடுகளே அவற்றின் விருப்பத்திற்கு மேயுமாறு விட்டு விட்டுக் காலேக் கடன்களை முடிப்பான்; கதிரை மீண்டும் வணங்குவான்; பின்னர் பால் கறப்பான். மாலை நேரம்