பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Iլի 44 தோடு, வேறு பல வேண்டாத செயல்களிலும் ஈடுபட்டு வருவாய்க்கு மிஞ்சிய அளவில் செலவளிக்கத் தலைப் படுகின்றனர். ஒருவன் நோய்வாய்ப்பட் டிருப்பதாக வைத்துக் கொள்ளுவோம். அவ்வளவுதான், அவனே மன்னிப்பதற்காக என்று அவனது உற்ருர் உறவினர் எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்து குவிந்து விடுவார்கள். வீட்டிலிருக்கும் உணவுத்தானியம் அவ்வளவும் தீர்ந்த பிறகே சொந்த வீடு திரும்புவர். மற்ருென்று. அறுவடை ஆகின்ற நேரமாக இருக்கும். கடவுள் பூச்சிகளே விட்டுப் பயிரை அளித்த தாகக் கூறி, அதற்காகக் கடவுளே அமைதிப் படுத்த எண்ணி, ஒரு பெரு விருந்து செய்து வீட்டையே வெறு வீடாக்கி விடுவர். ஒருவன் வீட்டிலே பிணவிழா நடந்தா லும் சரி, மணவிழா மடந்தாலும் சரி. அவன் வீடு காலிதான், அப்படிச் செலவு உண்டாகும். துரண்டில் மீன் இத்தகைய வேண்டாத பெரும் செலவுகளில் பல படகர்கள் வறியவராவர். ஒரு பக்கம் குறைந்த வருவாய்: மற்ருெரு பக்கம் நிறையச் செலவு. இதல்ை படகர்கள் கடன் வாங்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு வருவர். சிறு இரைக்கு ஆசைப்பட்டுத் துண்டிலில் அகப்பட்ட மீன் போல, இவர்கள் முதலில் கொஞ்சம் கடன் வாங்கி இறு தியில் தம் வீடு வாசல்களை இழப்பர். இவர்கட்குக் கடன் தருதற்காகவே வேறுபகுதிகளிலிருந்து துருக்கர் பலர் படகர் களிடங்களுக்கு வந்து, ஊரின் நடுவிலே கடைவைப்பர். அக்கடையின் ஒரு மூலையிலே ஐந்தாறு மூடை கேப்பை, மற்ருெரு மூலையிலே பத்துப் பதினேந்து முழத் துணி, வேருேர் பக்கம் கொஞ்சம் அரிசி காய் கறிகள் ஆகியன இருககும். ஆனல் விலையோ யானைவிலை, குதிரை விலையாக இருக்கும். ஒவ்வொரு பொருளும் கொள்ளே விலைக்கு விற் கப்படும். ஆனால் ஒன்று. கடன் தருவர். இதல்ை படகர் கள் கொள்ளே விலைக்கே எல்லாப் பொருள்களையும் வாங்கு வர். ஒரு ரூபாய்க்கு அரையன வட்டி. படகளுல் வட்டி