பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 கூடச் செலுத்த முடியாது. நாளாக ஆக வட்டி ஏறிக் கொண்டே செல்லும். அரையாண்டுக்கு ஒரு தடவை கடன் பத்திரம் புதுப்பிக்கப்படும். தூண்டில்காரனுக்கு மிதப் பிலே கண்ணிருப்பது போல, கடன் கொடுத்தவனுக்கு வட்டி ஏறுவதிலே கண்ணிருக்கும். அவன் எதிர்பார்த்த வட்டியும் முதலும் சேர்ந்து விடுமானல் கடனளியின் நிலத்தையும் வீட்டையும் ஆட்டையும் கைப்பற்றி விடுவான். அப்பாவிப் படகர்களோ, வழக்கு மன்றம் ஏற விரும்புவார்கள், இழந்த சொத்துக்களே மீண்டும் பெற. படகர்களும் வழக்கு மன்றமும் : படகரின் கண்ணும் கருத்தும் வழக்கு மன்றங்களில் இருக்குமே தவிர, உழைப்பிலே இராது. எனவே, நாள் தோறும் வழக்கு மன்றம் ஏறி ஏறிக் காலும் தேயும். வழக்கு மன்றப் படிகளும் தேயும். இதல்ை உழவை மறந்து விடுவர். வருவாய் மேலும் குன்றும். ஆனல் செலவோ மிகும். உதகை வழக்கு மன்றத்திலே படகரின் வழக்குகள் தொடர்ந்து நடைபெறும். இயற் பெயர்களே அன்றிப் பட்டப் பெயர்களேயும் வைத்துக் கொள்வர். குருடன், பூனேக்கண்ணன், பெருந் தலேயன், பழுப்புவிழியன், வாதநோயன், தேன்குடியன், பல்லன், கொண்டி, வழுக்கைத்தலேயன், குறட்டையன் என்பன போன்ற பல பெயர்களே வைத்துக் கொள்வார்கள். சி. :) அF ! f கம்பளியை வகைப்படுத்துவதிலே தவறுவோனேக் கொங்கா என இழித் துரைப்பார்கள் படகர்கள். 'கொங்கா' என்ற சொல் இன்று ஏனைய சில பகுதிகளிலும் பரவி விட்டது. வாழ்த்து : படகர்கள் ஒ ரு வ ைர ஒருவர் ச ந் தி க் கு ம் பொழுது வணக்கம் சொல்லி ஆங்கிலேயர் போல வரவேற் றல் இல்லை. ஒரு முதிய படகனும் ஒர் இளேய படகனும்