பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சந்திப்பின் இளையவன் தன் தலையைத் தாழ்த்துவான். முதியவன் தலையைத் தொடுவான். இதற்குத் தலை கொடுத் தல் என்று பெயர். இவ்வழக்கம் இன்றும் சிற்றுார் களில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலே உண்டு. படகன் உடையாருக்குத் தலை கொடுப்பான், உடையானின் உயர்வு கருதி. ஒரே வகுப்பினர் தம்முட் சந்திப்பின், அண்ணு வா ! வா அப்பா ! வா தம்மா : (தம்பி)!' வா அம்மா ! வா அக்கா ! ' என அழைத்துக் கொள் வர். இவ்வழக்கம் இன்றும் நம்மிடையே உண்டு. வேறுபட்ட வகுப்பினர் சந்தித்துக் கொண்டால் வா மாமா : வா பாவா ! (வா மைத்துளு :) என்று கூறி வரவேற்பார் தோதவர், படக மணியக்காரரையோ, தமக்கு அறிமுகமான ஒரு பழம் படகனையோ கண்டால், தோதவன் தன் தலே தாழ்த்தி, மட்டின்புடியா ? ' என்பான். இதற்குப் பொருள், மட்டின், நீங்கள் வந்து விட்டீர்கள் ! என்பது. இதன்பின், படகன், தோதவனின் உச்சித் தலையில் கை வைத்து ' புத்தக் புத்தக் ' என்பான். வாழ்த்துக்கள்: வாழ்த்துக்கள்! என்பது இதன் பொருள். இத்தகைய வணக்க முறையைத் தோதவர், படகப் பெரியோருக்குத் தான் செய்வர். ஏனைய படகருள் தனக்கு மூத்தோருக் கும், முன்பே பழக்கமானவருக்கும் இத்தகைய வணக்க முறையைத் தோதவன் செலுத்தல் உண்டு. LJL-off ருக்குள். துரியர் தவிர ஏனைய மக்கட்கும் இத்தகைய சிறப்புண்டு. இவ்வாறு உயர்ந்த முறையில் தோதவர்கள் படகருக்கு வணக்கம் தெரிவித்தாலும், படகர்கள் எந்த அளவுக்குத் தோதவரைவிட உயர்ந்தவர்கள் என்பதில் ஐயம் பிறக் கிறது. படகர் தோதவருக்குப் பாதுகாப்பாகவும் துணேயா கவும் இருப்பதாலேயே தோதவர்க்குப் படகரால் இச்சிறப்பு உண்டாகிறது என்று கூறுகின்றனர். ஆனால், படகர்கள் தோதவருக்குள்ளே முதியவர்க்கும்கூட இச் சிறப்புச் செய்வதில்லை,