பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 o முட்டுக்கொட்டா : படகருக்கு வேண்டிய பலவகை உழவுக் கருவிகள். பானைகள் ஆகியன தருபவன் . " முட்டுக்கொட்டா' எனப்படுவான். இதற்குப் பதிலாக ஆண் டு க் கொருமுறை உணவுப் பொருள்களாகிய தானியங்கள் கிழங்குகள், கடுகு முதலியவற்றை முட்டுக்கொட்டா பட கரிடம் பெற்றுக் கொள்வான். கொட்டா வீட்டு இழவுக்குப் படகன் கொஞ்சம் அரிசியும், ஐந்து ரூபாயும் ஒர் எருை யும் தரவேண்டுமாம். - * கொட்டா தரும் சட்டி பானைகளைப் படகர்கள் உடனே பயன்படுத்துவது இல்லை. முதலில் அவை, காட்டிலோ, புத ரிலோ திறந்த வெளியிலோ மூன்று நாட்கள் வைக்கப்படும். பின், வீட்டு முற்றத்தில் மூன்றுநாட்கள் வைக்கப்படும். பின் வீட்டு முற்றத்தில் மூன்று நாள் வைக்கப்படும். பிறகு அவற். றில் வெந்நீர் மட்டும் ஊற்றி வைக்கப்படும். இவ்வாறு பல முறையில் துய்மை செய்யப்பட்ட பின்னரே அச்சட்டி பானைகள் பயன்படுத்தப்படும். நன்கொடைகள்: ஆண்டு .ே த று ம் படகர்கள் தோதவருக்குத் தானியங்கள் தர வேண்டும். சிற்றுார்கள் மன்று எனப்படும். ஒவ்வொரு மன்றிலும் வாழும் படகர்கள் ' குடு என அழைக்கப்படும் தானியவரியைத் தோதவர்க்கு அளிப்பர். பால் கறக்கின்ற தோதவன் பாலாள் என்ற பெயரைப் பெறுவான். அப் பாலாளின் உணவு முறையில் சில குறிப்பிட்ட விதிகள் உள்ளன. தோதவப் பாலாள் படகர்தரும் விளேயுளேயே உண்பான். முன்பை விட இப் பொழுது தோதவப் பாலாட்கள் அதிகமான அரிசி உணவு உண்கின்றனர். படகன் அரிசியை விளைவிப்பதில்லை யாத லால், பாலாள் படகனிடம் அரிசியை ஒரு போதும்பெறு வதில்லை. பாலாளின் உடை கோவையில் செய்யப்படும் கரிய இருண்ட துணியேயாகும். இத்துணியை திக்கில்ப் மாவ். எனப்படும் படகன் கொணர்வான். மற்ற மண்பாண்டங் களேப் போல, பால் பானையையும் கொட்டாவிட மிருந்து