பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பெறுவதில்லை, அவை இந்துக்கள் எனப்படுவோரால் செய்யப்பட்டுப் படகரால் தரப்படுபவை. - கொல்லாமல் கொல்லுவார்: - குறும்பரைக் கண்டால் படகர்க்குப் பேரச்சம் உண்டா கும். படகருடைய நாடோடிக் கதைகளில் குறும்பர்கள் அடிக் கடி வருவர். குறும்பர் விரும்பினால், படகப் பெண்டிரின் இத யத்தை வலி தெரியாமல் அப்புறப் படுத்திக் கொன்றுவிடு வர். இதற்கு மந்திரம் அவர்க்குத் துணையாம். இவ்வாறு படகர் எண்ணி நடுங்குவர். மந்திரத்தின் உதவியால் இரவில் ஒருவரும் அறியாமல் வீட்டுக்குள் புகுந்து வேண்டி யனவற்றை எடுத்துச் செல்வராம். பேய் பிசாசையும், கண்ணேற்றையும் கழிக்கக் குறும்பரை நாடுதல் படகர் வழக் கம். குறும்பரும் மந்திரங்கள் கூறிப் பேயையும், கண்ணேற் றையும் நீக்கி விடுவார்களாம். - குறும்பர் பேயை ஒட்ட முடியாது என்று சொல்லி விட்டாலோ, தோதவரும் படகரும், குறும்பர் பேயாட்டி விளையாடுகிருர்போலும் என்று எண்ணிவிட்டாலோ, அவ் வளவுதான். படக மக்கள் வாழும் ஊரே குறும்பருக் கெதி ராகத் திரண்டுவிடும். குறும்பரைப் பழிவாங்க எல்லோரும் துடிப்பர். குறும்பருடைய வீடு தீக்கிரையாகும். இவ்வாறு படகர்தம் சீற்றத்துக்கு இரையான குறும்பர்கள் கணக்கி லடங்கார். ஒரே நேரத்தில் ஐம்பத்தெட்டுப்பேருக்கும் அதிக மாகக்கூடக் குறும்பர்கள் படகர் மூட்டிய தீக்கு இரையாகி மடிந்தும் இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பமும் குறும்ப னுக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்களு வீதம் வரி செலுத்துகின் றது. குறும்பன் எவனுவது படகர் ஊர்கட்கு வந்துவிட்டால், படகர் கூடி ஒரு தொகிை அளித்து அவனே ஊரை விட்டுப் போகும்படி வேண்டிக்கொள்வர். படகர் வீட்டிலே நடைபெறும் பிறப்பு இறப்பு யாவற்றிற்குமே குறும்பனுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் கிடைத்துவிடும். தோதவரும் தொலைவர் : = தோதவர்களிலே சில முதியவர்கள் மந்திரவாதிகளாக உள்ளனர். இம் மந்திரவாதிகளைக்கொண்டு தோதவர்களே