பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 அஞ்சுவர். படகர்கள் இம் மந்திரவாதிகளேக் கண்டு நடு நடுங்கிச் சாவர். அந்த அச்சத்தில்ை படகர்கள் அம் மந்திர வாதிகட்குத் தானியங்கள் ஏராளமாகத் தருவர். சில நேரங். களில் படகர்கள் மந்திரத்திற்கு அஞ்சாமல் பல தோதவர் களைக் கொன்றுபோடுவதும் உண்டு. என்ருலும் படகர்க்குத் தோதவரிடம் அச்சமே. f பாலாள் ஆகும் படகப் பாலகன் : படகச் சிருர் நம்மைப்போல நினைத்தவுடனே பால் கறக் கத் தொடங்கிவிடமாட்டார்கள். ஒவ்வொரு படகனும் ஒரு குறிப்பிட்ட சடங்கு நிகழ்ந்த பின்னரே பால் கரக்கத் தொடங்குவான். படகனுக்கு இச் சடங்கு எட்டு அல்லது ஒன்பதாவது வயதில் நடத்தப்படும். குறிப்பிட்ட சிறுவன் ஒரு நல்ல நாளில், காலேயில் எழுந்து குளித்துத் துய ஆடை உடுத்திக்கொள்வான். ஒரு பால் எருமையும் கன்றும் அவன் வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து நிறுத்தப்படும். பின்னர் அப்பையனை அவனுடைய பெற்ருேராவது உறவினராவது அம் மாட்டருகில் அழைத்துச் செல்வர். அப்பொழுதுதான் பால் கறந்த ஒனி எனப்படும் ஒரு மூங்கில் குழாய் அப்பைய னிடம் தரப்படும். பின்னர் முதியவர் அப்பையனை மாட்டரு கில் கூட்டிச்செல்வார். ஒரு முதியவர் அப் பையனுக்குப் பால் கறக்கும் முறைகளே நன்கு விளக்குவார். பிறகு பையன் சிறிதளவு பால் கறப்பான். இதுதான் சடங்கின் முதற்படி. அவன் பால் கறக்கும் முன்பே ஒனியின் நிறையப் பால் இருப்பதால் அவனுல் அறைகுறையாகப் பிழைபடப் பால் கறக்க முடியாது. பிறகு அப்பையன் ஒனியை வீட்டுக்குள்ளே எடுத்துச் செல்வான்: உண்கலங்களில் பால் துளிகளேத் தெளிப்பான். இதன் பொருள், அன்றிருந்து அந்த வீட்டுக்கு பால் தருவது அவன் பொறுப்பாகிவிடுகிறது என்பதாகும். பிறகு தன் பெற்ருேர் உற்ருர், உறவினர் ஆகியோர் முகங்களின்மீதும் பால் துளிகளே அவன் தெளிப்பான். அதை அவர்களும் அன் போடு ஏற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்ல, அன்று போலவே என்றும் நன்ருகப் பால் கறந்து வீட்டைச்