பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 செல்வமும் சீரும் பெறச் செய்யும்படி அவனே வேண்டிக் கொள்ளுவர். இதன்பின் அப்பையன் பாலறைக்குள் (ஆகூடு) நுழைந்து ஒனியை வைத்துவிடுவான். இந்த நாளிலிருந்து அப்பாலறைக்குள் அவன் நுழையலாம் என்பு தால் இச்சடங்கு மிகவும் முக்கியமானதாகப் படகரால் கருதப்படுகிறது. தலை ஈற்று : எருமையோ பசுவோ முதன் முதல் கன்று ஈனுமாயின் அதற்கென ஒரு சடங்கு செய்யப்படும். மூன்று அல்லது ஐந்து நாட்களுக்கு அதில் பால் கறப்பதில்லை. பின்னர் சிறுவன் ஒருவன் அதில் பால் கறக்கத் தேர்ந்தெடுக்கப்படு வான். அச் சிறுவன், பாயிலே உறங்கக்கூடாது. தலைப் பாகை வைக்கக்கூடாது. இடுப்பிலே உடையை இறுக்கிக் கட்டாமல், மார்பிலே தொய்வாகக் கட்ட வேண்டும். அவன் இறைச்சி உண்ணக்கூடாது. இருளர் முதலிய தீண் டாதாரையும் பெண்களேயும் தொடக்கூடாது; அவரோடு பேசவும் கூடாது : பால் கறக்கும் சிறுவன் நல்ல நாளில் காலேயில் எழுந்து ஒனியுடன் ஆற்றுக்குச்சென்று குளித்துப் புத்தாடை அணிவான். அவன் எடுத்துச் சென்ற ஒனியிலே மரஇலேக் குழம்பு தடவப்பட்டுப் பின் சுடப்பட்டுத் துய்மைப்படுத்தப்படும். பின்னர் அந்த ஒனி யில் பால்கறக்கப்படும். அந்தப் பாலோடு அவன் ஒடைக்குச் செல்வான். மீனிகி என்ற ஒருவகை இலேயால் மூன்று தொன்னேகள் செய்யப்படும். அத்தொன்னேகளிலே பால் முகந்து நீரில் ஊற்றப்படும். எருமையின் ஊருக்கு அருகிலே மாடீசுவரர் கோயில் இருக்குமாயின் மீதப்பால் அக்கோயிற் பூசாரியிடம் தரப்படும். பிறகு வாழைப்பழமும் பாலும் உடையார் வகுப்பினன் ஒருவனிடம் தரப்படும். அவன் அவற்றை ஒடையில் எறிவான். இச்சடங்கின்போது பால் கறக்கும் சிறுவனுக்கு நல்ல மதிப்பு இருக்கும். முதல் படையல் அவனுக்கே. அவன் அப்படையல் முழுவதையும் சாப்பிட வேண்டுமாம்.