பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 1 - கோயில் பாற்பண்ணைகள் : ஒவ்வொரு வீட்டிலும் பாலறை இருப்பதுபோலக் கோயில்களிலும் பால் அறைகள் உள்ளன. அவற்றிற்குக் கோயிற் பாற்பண்ணைகள் என்பது பெயராம். கோயிற் பாற்பண்ணேகளுள்ளே பைராங்கன்னிக் கோயிற் பாற் பண்ணே தான் பெரியது. கோயிற் பாற்பண்ணேகளைக் கவனிப்பவன் கோயிற் பூசாரி. இவன் மிகுந்த மதிப்போடு நடத்தப்படுகிருன். இவனுக்குக் கட்டுக் காவல்கள் அதிகம். இவன் அடிக்கடி ஊர்ப்பக்கம் வருதலோ, பருவ மங்கைய ரோடு பேசுத லா கூடாது. கோயிலுக்குள்ளேயே இவன் தன் உணவை ஆக்கிக்கொள்ளல் வேண்டும். மார்பைச் சுற்றித் தொளதொளப்பான ஆடையைக் கட்டல்வேண்டும். திருவிழா நாளில் தரும் உடைகளேத்தான் இவன் கட்டிக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்ணுதல் கூடாது. பூசாரி தன் வேலையை விட்டுவிலகும் முன்னரே ஒரு வனைப் பழக்கிவைக்க வேண்டும். கோயில் மாடுகளின் பால், தயிர் முதலியவற்றை விற்று, அதன்மூலம் வரும் பணத்தைப் பெறுபவன் கோயிற்பூசாரியே. பைராங் கன்னி என்ற ஊர் தூய ஊராகக் கருதப்படுகிறது. அங்கு ' ஒலகுடி ஏதும் கிடையாது. - - பைராங்கன்னியின் வரலாறு : இவ்வரலாறு ஒரு கதை. பூசாரி ஒருவன் மகளைப் பற்றிய கதை. இக் கதை ஏறத்தாழ நூருண்டுகட்கு முன்னர் நடந்ததாம்! நுங்தளா என்பது ஒரு சிற்றுார். அது நீல மலைப் பகுதியில் மேகநாட்டுள் அடங்கியது. இந்த ஊரில் ஒரு பூசாரி. அவனுக்கொரு மகள். பூசாரி தன் மகளைப் பறங்கி நாட்டு வாலிபன் ஒருவனுக்கு மணமுடிக்கத் திட்ட மிட்டான். அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை. என்ருலும் பூசாரி தன் மகளைக் கட்டாயப்படுத்தினன். எனவே அவ் வூர்க் குளத்துக்கு வந்தாள்: குளத்தில் இறங்கி முகத்தைக் கழுவினுள்: பின் குளித்தாள்: வீழ்ந்து இறந்தாள். பின்னர், அவ்வூரான் ஒருவனின் கனவில் தோன்றி, தான் ஒரு மனிதப்