பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பிறவியல்ல என்றும், மனித உடலில் புகுந்த மலேமகளே (உமை) என்றும் அவள் சொன்னாளாம். உடனே துந்தளா மக்கள் அக்குளத்தின் கரைகளே உயர்த்தி எந்தப்பெண்ணே யும் அதனருகிற் செல்லவொட்டாது தடுத்தனர். அக்குளத் தருகில் பூசாரியும், நோன்பு இருந்தவனும்தான் செல்ல உரிமை உண்டு. அதுவும் காணிக்கை செலுத்திய பின்னரே செல்லலாம். அத் தெய்வத்துக்குப் படகர் கட்டியதே பைராங்கன்னிக்கோயில்'. இலிங்கம் அணிவித்தல் : * படகச் சிருர்க்கு இலிங்கம் அணியும் சடங்கு ஒன்று உண்டு. இலிங்கம் அணிபவர் இலிங்காயத்து வகுப்பினர் என அழைக்கப்படுகின்றனர். இலிங்காயத்து மரபிலே பிறந் தால் மட்டுமே ஒருவன் அம்மரபினகை ஆகமுடியாது. இந்தச் சடங்கு நடைபெற்ருல்தான் அவன் உண்மையான இலிங் காயத்து மரபினனுகின்றன். இஃது அம்மரபினரின் கோட்பாடு. இச்சடங்கு பதின்மூன்ருவது வயதில் நடைபெறுகிறது. பையனுக்கு வயது பதின்மூன்ருனதும் அவனது பெற்ருேர் அப்பையனுக்கு இவ் விழாவை அல்லது சடங்கை கடத்துவர். இச் சடங்கின் போது,பையனின் பாட்டன், பாட்டி, இன்னும் அவன் உறவினருள் வயதாலும் அறிவாலும் முதுமை அடைந்த மூதறிவாளர்கள் ஆகியோர் உடன்இருந்து சடங்கை நடத்துவர். இலிங்காயத்துச் சிறுவனின் சடங்கு களுக்கு ஒருகுருக்கள் வருவார். அக்குருக்கள் உடையார் மரபினராக இருப்பர். இக்குருக்கட்குத் தனி ஊர்கள் உள் ளன. அவ்வூரிலே அவர்கள் வாழ்வர். விழாவுக்கு வருமாறு படகர் சொல்லியனுப்பில்ை அவர்கள் வந்து விழாவை நடத்தி வைப்பார்கள். - ஒவ்வொரு சிறுவனுக்கும் தனித்தனியே வெவ்வேறு நாளில் இலிங்கத் திருமணம் நடக்கும். ஒரே நாளிலேயே பல சிறுவர்க்கு இத் திருமணம் நடத்தலும் உண்டு. விழா நடக்கும் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் விழாநாளன்று நோன்பிருப்பர். அதிகாலையிலேயே பால் கறக்கப்படும்

      • :