பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 3. == விழாவுக்காக எல்லா விட்டுப் பாலும் ஒன்ருக ஊற்றி வைத் கப்படும். காலை பத்துமணி அளவில் குருக்கள் ஊரின் எல்லையில் வந்து காத்திருப்பார். அப்போது பையனின் உற வினர் ஐந்துபடி அரிசி, வெண்ணெய், அவரை முதலிய பருப்பு வகைகள், பன்னிரண்டு தட்டு ஆகியன வைக்கப்பட்ட ஒரு கூடையுடன் சென்று குருக்களே வரவேற்பர். குருக்கள் அக் கூடையினைப் பெற்று, ஓடைக்கரை ஒன்றில் அமர்ந்து ஒமத் தி வளர்ப்பார். ஓமத் தீயில் நறுமணப் பொருள்கள் சொரியப்படும். பின்னர் எல்லோரும் ஆற்றுக்குச் சென்று நீராடித் திரும்புவர். வாழை இலை ஒன்று ஓமத் தீக்குக் கிழக்குப் பக்கத்தில் விரித்து வைக்கப்படும். பையனின் பெற்ருேர் தரும் இலிங்கங்களே அக் குருக்கள் வாங்கி, இலை யில் வைப்பார். பின், சிறுவர்கள் தத்தமக்குரிய இலிங்கங் களைக் குருக்களிடமிருந்து பெற்றுப் பாலாலும் நீராலும் கழுவுவர். காலேயில் சேர்க்கப்பட்ட பால் முழுதும் இதற்குத் தான் பயன்படும். எனவே, பால் தரையில் ஒடும். கழுவப் பட்ட இலிங்கங்கள் குருக்களிடம் திருப்பித் தரப்படும். குருக்கள் அந்த இலிங்கங்களே, இடது உள்ளங் கையில் வைத்து மூடி அச் சடங்குக்குரிய மந்திரங்களேச் சொல்லு வார். சுற்றிலும் நிற்கும் எல்லோரும் அம் மந்திரங்களே, பயபக்தியோடு கேட்பர். அம்மந்திரங்களாவன:- * ஒ சிவனே : அரனே பகவானே ! அறுபத்து மூன்ருயிரம் பெயர்களையும் பெருமைகளையும் உடைய பெருமானே ! .. நூற்றுத் தொண்ணுாருயிரம் கணங்களின் தலைவ ! நீர் அளிப்பவனே நாளும் வணங்கப்படுவோனே ! மலைமகள் கணவா ! ஒ பெருமானே ! ஒ சிவலிங்கனே : கின் அடியே எம் புகலிடம் ! ஒ சிவனே : சிவனே : சிவனே : சிவனே : இம் மந்திரங்களேச் சொல்லிக் கொண்டே குருக்கள் o ஒமத் தீயைச் சுற்றிலும், நீரையும் பாலேயும் தெளிப்பார்: மலை-4