பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பின் இலிங்கங்களே ஒவ்வொன்ருகச் சிறுவரிடம் அளித்து ஒரு முழ வெண் துகிலால் அவற்றைச் சுற்றித் தத்தம் விலக் கைகளிலே ஏந்துமாறு கூறுவார். சிறுவர்கள் அவ்வாறே செய்து, முதலில் சொன்ன சிவ மந்திரங்களே ஐந்து தடவைகள் சொல்லுவர். அம் மந்திரங்கள் சொல்லச் சொல்ல இலிங் கங்களைக் கழுத்தருகில் கொண்டு செல்வர். இறுதியில் ஐந் தாவது தடவையும் மந்திரம் சொன்னவுடன், குருக்கள் இலிங் கத்தைச் சிறுவர் கழுத்தில் கட்டிவிடுவார். அப்போது சிறு வர்கள் குருக்கள் காலில் மண்டியிட்டு விழுந்து தொட் டுக் கும்பிடுவர். இலிங்கத்தைக் கட்டிய்தும் குருக்கள் அச் சிறுவரை வாழ்த்துவது வருமாறு: .. உனக்கு ஒன்று ஆயிர மாகட்டும் ! சிவ்லிங்கம் என்றும் காப்பா யாக ! அப்படி நீசெய்யின் அடிசிலும் பாலும், அளவில்லாமல் நீ பெறுவாய் ! போரிலும் புகழிலும் பொருளிலும் உறவிலும் ஓராயிர மாண்டுகள் நீ ஒளியுடன் திகழ்வாய் !' இத்தகைய வாழ்த்துடன் கூடிய சடங்குகள் ஒவ்வொரு சிறுவனுக்கும் தனித்தனியே நடத்தப்படும் என்பது குறிப் பிடத்தக்கது. சடங்கு முடிந்தவுடன் குருக்கள் அரிசி, வெண்ணெய் முதலியவற்ருேடு தன் ஊர் திரும்புவார். பின்னர் இலிங்கம் கட்டிய ஒவ்வொரு சிறுவனின் பெற்ருேரும் தனித்தனியே விருந்தளிப்பர். ஏழைப் படகனும்கூட ஐந்து படகனுக்கு விருந்தளிப்பானம். o

  • ... 畢 -

இதுகாறும் கூறியது மேக நாட்டு உடையார் நடத்தும் இலிங்கச் சடங்காகும். இனி மற்ருெரு நாட்டில் நட்க்கும் இதே சடங்கினைக் காண்போம். --- - பரங்கி நாட்டுச் சடங்கு : பரங்கி நாட்டிலே இச் சடங்கு ஆண்டுப் பிறப்பு, சிவ ராத்திரி ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு நாளில் நடக்கும். - ■ - -