பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 விதைவிழா, விதைப்பின்போது கொண்டாடப்படும் . இவ்விழாக் கொண்டாடும் முறையே ஒரு தனிச்சிறப் புடையது. விதைப்பு நடைபெறுவது பங்குனி மாதத் தில் தான். இந்த விழா மேகநாடு, பரங்கி நாடு முதலிய நாடு களில் நடைபெறும். இந்நாடுகளில் நடைபெறும் விழாக்கள் யாராவது ஒருவர் தலைமையில்தான் நடைபெறும். வளர்பிறை தொடங்குவதற்கு முன்னர் வருகின்ற செவ்வாயன்று விழாத் தொடங்கப்படும். அச் செவ்வாய் நல்ல நாளாகப் படகர்களால் கருதப்படுகிறது. அந்த நல்ல நாளின் முதல்நாள் இரவு நடுச் சாமத்தின் முன்னே பின்னே திவ்விகோயிற் பூசாரி துயிலினின்றும் எழுவான்; ஏர் பூட்டிய காளேகள் முன் செல்ல, குறும்பன் பின் தொடர, ஐந்தாறு வகைத் தானியங்களேயும் ஒர் அரிவாளேயும் கொண்டு வயல் நோக்கிச் செல்வான். பின்னர் ஏர் பூட்டுவான்; அதன்பின், தான் கொண்டு வந்த தானியங்களைக் குறும்பனிடம் உள்ள ஒரு துணியில் கொட்டுவான். பூசாரி ஏரைப் பிடித்து நிலத்தை உழுது கொண்டே மூன்று வட்டம் வருவான். அதன் பின் னர் குறும்பன் எருக்கு முன்பாக வந்து நிற்பான்; மேழிக் காலேப் (மோக்கால் அல்லது மேக்கால் என்பது நாட்டு வழக்கு) பிடித்து ஏரை நிறுத்துவான். அது மட்டுமா? இல்லை. ஏரை நிறுத்திய குறும்பன், கிழக்கு நோக்கியவாறே நிலத்தில் மண்டியிட்டுத் தலைப்பாகையை அவிழ்த்துக் கீழே வைத்துப் பின் தன்னிரு காதுகளேயும் உள்ளங்கைகளால் பொத்தி, 'து து !!' என மும்முறை துப்புவான்; எழுவான்; துணி யில் பூசாரி கொட்டிய தானியத்தை மும்முறை நிலத்தின் மீது வீசுவான். வீசிய பின்னர் பூசாரியும் குறும்பனும் வீடு திரும்புவர். வீசியது போக மீதித் தானியங்கள் இருக்கு மால்ை, " அட்டு" என அழைக்கப்படும் சேர்ப்பறையில் அது சேர்த்துக் கொட்டிவைக்கப்பெறும். இத்ன் பின்னர் பாலறையில் புத்தம் புதிய பாஜன ஒன்று. வைக்கப்படும். அதிலே நீர் நிறைய ஊற்றப்படும். பூசாரி அதில் கைவிட்டு "நெரத்து பிட்டா என்பான். தமி ழில் வழங்கும் "நிறைந்து விட்டது" என்றதன் திரிபே அச்