பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 ஆ சொற்ருெடர். இதுதான் விதைவிழா. இந்த விழாவன்று விருந்து நடக்கும். தினைவிழா :-(அறுவடை விழா) மற்ருெரு குறிப்பிடத் தகுந்த விழா திவ்வியப்பா அல் லது தினேவிழாவாகும். இவ்விழா பெரும்பாலும் வைகாசி ஆனி மாதங்களில்தான் நடைபெறும். அதுவும் திங்கட் கிழமைதான் நடைபெறும். இவ்விழாவின் முக்கிய நோக் கம் பல ஊர்களிலும் உள்ள மகாலிங்கசாமி, கிரிய உடை யார் என்ற இரு தேவர்கட்கும் சிறப்புச் செய்தலாம். கண் ணர் முக்கில் மகாலிங்கசாமிக்கும், தாண்ட நாட்டில் கிரிய உடையாருக்கும் கோதமலேப் படகர் கோயில்கள் கட்டியுள்ள னர். துவ்வி எனின் அவர்கள் மொழியில் சுடுகாடு என்று பொருள். எனவே திவ்வி விழாவை வாய் தவறியும் துவ்வி என உரைப்பது பெரும்பிழை யாகும். - இத் திவ்வி விழா ஏதேனும் ஒர் ஊரில் நடக்கும். இவ் விழாவிற் கலந்துகொள்ளப் பக்கத்து ஊர் மக்களும் வருவர். விழாவன்று நண்பகலில் பூசாரி ஒருவன் படகர் சிலரோடு கிரிய உடையார் கோயிலுக்குச் செல்வான். பின்னர் அவர் கள் மகாலிங்கசாமி கோயிலுக்குச் செல்வர். இந்த கூட்டத் துக்குத் தலைமை தாங்கிச் செல்பவன் ஒரு குறும்பனுக இருப்பான். இவன் போகும் வழியெல்லாம் கட்டைகளையும் துத்துளேயும் எறிந்துகொண்டே போவான். இதற்கிடையில் பூச்ாரி பூசனைப் பொருள்களோடு மகாலிங்கசாமி கோயி லுக்குச் சென்று பூசை செய்வான். பின்னர் எல்லோரும் கிரிய உடையார் கோயிலுக்குச் சென்று அங்குள்ள சிறு தெய்வங்கட்குப் பாற்சோறு படைத்துச் செல்வர். மறுநாள் எல்லோரும் கோயிலில் கூடுவர். தேங்காய் உடைத்து எல்லோரும் கடவுளைத் தொழுவர். அடுத்துத் தலைப்பேறு பெற்ற மத்கவி வகுப்பைச் சேர்ந்த பெண்டிர் எல்லோரும் தூய உடை உடுத்தித் தம் மதலேகள் சூழக் கோயிலுக்கு வருவர். அந் நன்ளிைலே அப் பெண்டிர் அணிந்துவரும் மூக்குத்தி ' எலிமூக்குத்தி ' எனப் பெயர்