பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 யிலே படகப் ப்ெரியவர்கள் பலரும், நெசவாளியும் எழுந்து, குளித்துவிட்டு, நெசவுக் கூடாரத்திற்குள் புகுவர். நெசவாளி தன் தறியைச் சரிபார்ப்பான் ; நறுமணக் கட்டிகளே (சாம் பிராணி) எரித்துத் தறியை வழிபடுவான். படகர் அவனுக் குப் புத்தாடை, கொஞ்சம் பணம் ஆகியன தந்து, கடவுளுக் காக ஒரு துப்பட்டியும், கச்சைகள் இரண்டும் நெய்து தரும் படி வேண்டிக் கொள்வர். பிறகு விழா தொடர்ந்து நடை பெறும். ஒவ்வொரு நாள் விழாவிலும் படகர்கள் குடித்து விட்டுக் கோயில் முன் கூத்தாடிக்கொண்டு மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடப்பர். கடவுள் சிலையை விழாவின் கடைசி நாளன்றுதான் அவர்கள் பார்க்க முடியும். விழாவின் கடைசிநாள் காலையில் கோயிற் பூசாரி, படகர் ஆகியோர் புத்தாடைகளுடன் ஒடைக்குச் செல்வர் : ஒடையில் ஆடைகளைத் துவைப்பர் : கதிரொளியில் உலர்த்துவர். உலர்ந்த ஆடைகளுடன் கோயிலுக்குச் செல்வர்: ஆடைகளேக் கடவுட் சிலைக்கு அணிவிப்பர். அப்பொழுதுதான் படகர் கடவுளைக் காண்பர். அடியார்கள் பக்திப் பெருக்கில், முன் னுள்ள தாம்பாளத்தில் காசுகளைப் போடுவர். கடைசி நாள் நண்பகலோடு ஆட்டங்களும் பாட்டுக்களும் முடியும். பின்னர் எல்லோரும் தத்தம் ஊருக்குத் திரும்புவர். இவ் விழாவில் குறிப்பிடத் தக்கது, நெசவாளனே விழா நடக்கும் ஊருக்கு வந்து ஆடை தருவது என்பதாம்.

  • =

இந்தப் பைராங்கன்னி விழாவைப்பற்றித் திருவாளர் ஒயிட் எட் என்பார் பின்வருமாறு கூறியுள்ளார் : மற்ற ஊர்களிலிருந்து வந்த படகர்கள் பணம், அரிசி, பழம், பொற் குடை, வெள்ளிக் குடை, ஆடைகள், எருமைகள் முதலியவற்றைப் பெண் தெய்வங்கட்குக் காணிக்கை திருவர். அப்பொழுது அக்கோயிற் பூசாரி ' உங்கள் ஊரில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உண்டு' என்று ஒரு சாரரிடம் கூறுவர்ன், வேருெரு சாரரை நோக்கி உங்கள் ஊரில் பயிர் கருகிவிடும் என்றும், இன்னொரு சாரரை நோக்கி, உங்கள் ஊரில் காலராவும், வைசூரியும் வரும் ' என்றும்