பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கூறுவான். இவ்வாறு இவன் எதிர்காலப் பலன் கூறிய பின்னர், எருமைகள் காணிக்கையாகத் தரப்படும். அவைகள் பலியிடப்படுவதில்லை. காணிக்கை தருவோர், நிலத்தில் மண்டியிட்டே வணங்கி எழுவர். அப்போது பூசாரி சில மலர்கள் தருவான். அடியார் கூட்டம் அம்மலர்களேத் தம் தலையில் செருகிக் கொள்ளும். காணிக்கையின்போது, கோயில் மணி ஒலிக்கும் ; கொம்பு முழங்கும். காணிக்கை முடிந்தவுடனே ஆடவர் எல்லாம் இரு குழுவினராகப் பிரிவர் : கோயிலின் முன் அவ்கோ-அவ்கோ " " இள்கோ' என முழங்கிக் கூத்தாடுவர். இக் கூத்துக்கள் தோதவர்க்குரியன வாம். தோதவரிடமிருந்து படகர்கள் கற்றிருக்கலாம். இப் பாடல்கள் தோதவர் மொழியில் அமைந்தவை." * * * தீக்குழித் திருநாள் : - - .." ஐதீச்சாமியின் திருநாள் அன்று தீக்குழி இறங்குதல் படகர் வழக்கம். இத் தீக் குழித்தல் மேலுார், தங்காலு, மைனில், சக்ககாரி, தீநாடு, கிடுகுளா முதலிய இடங்களில் நடைபெறும். தி நாட்டில் நடைபெறும் விழாமட்டும் உடை யார்க்குரியதாம். மற்ற இடங்களில் படகர்கள் இவ்விழாவை நடத்துவர். கிடுகுளாவில் மார்கழி மாதத்தில் இது நடக்கும். தீமிதிப்போர் அனைவரும் எட்டுநாள் பட்டினி கிடந்துஒன்பதாம் நாள் தீக்குளிப்பர். இக் குளிப்பு நன்னளாகக் கருதப்படும் திங்கட்கிழ்மைதான் நடக்கும். அப்போது பால்காய்ச்சித் சகுனம் பார்ப்பர். பால் இரு பானைகளிலும் நன்கு பொங்கி ல்ை நல்ல சகுனம் எனப் பொருள். எனவே அந்த ஆண்டு, அந்த வட்டாரத்தில் விளேச்சல் மிகுதிப்படும் என்பது படகர் நம்பிக்கை. இந்தத் தீமித்தல் விழாவுக்குக் கதை ஒன்று அம் மக்க ளிடையே வழங்குகின் றது. அது வருமாறு : நூறு அல்லது நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்னர் வாழ்ந்த படகர்கள் தீமிதிக்க அஞ்சினர். அவர்தம் அச்சங் கண்ட மகாலிங்கசாமியின் சில பாம்புருவங் கொண்டு கோயிற் சுவரிலே ஒரு துளையிட்டு வெளிவந்ததாம். அத்தோடு