பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 வெளியே எரிந்து கொண்டிருத்த தீமீதும் ஊர்ந்ததாம் : அது மறுபடியும் வந்த வழியே திரும்பிக் கோயிலுக்குள் சென்றுவிட்டதாம். இதனைக் கண்ட படகர் அச்சம் நீங்கி, அன்றிலிருந்து தீமிதிக்கும் வழக்கத்தை மேற்கொண்டனராம். இனித் தீ மிதித்தலை நோக்குவோம். காலில் மணி ஒலிக்க, ஒரு கையில் தலையீற்றுப் பசுவின் பாலும், மற் ருெரு கையில் பூவும் கொண்ட பூசாரி ஒருவன் தீக்குழியை நெருங்குவான். பின் பூசை செய்வான் ; அதன் பின் மலரைத் தியில் எற்றிவான். பாலே ஊற்றுவான். எறிந்த மலர் கருகினலோ, ஊற்றிய பாலால் தி அணேயும் ஒலி கேட்டாலோ அது தீகிமித்தம் எனக்கருதப்படும் : இவ்விரண்டும் இல்லே யால்ை, பூசாரி மனமகிழ்ந்து தீயில் இறங்கத் தொடங்குவான். அடுத்தாற்போல உடையார் வகுப்பைச் சேர்ந்த ஒருவன் இறங்குவான். அவனுக்குப் பின்னர் நோன்பினர் அனைவரும் இறங்குவர். இவர்கள் இறங்கு முன்னர் தம் கால் மயிர்களே எண்ணிக் கொள்வர். தீயிலிறங்கிய பின்னர் யாருக்கேனும் மயிர் குறைந்தால் தீ நிமித்தம் எனக் கருதப்படுகிறது. மேற்கு நாட்டு விழா: மேலே மலைத்தொடரின் மே ற்குப் பகுதியில் வாழும் படகர் நடத்தும் தீ மிதிப்பு விழாவாகும் இது. இவ்விழா மாசி மாதத்தில் முழுமதியை அடுத்து வருகின்ற ஒரு திங்கட்கிழமையில் நடைபெறும். இவ்விழாவில், மேற்குப் பகுதிப் படகர்கள், திரளாக வந்து கலந்து கொள்வர். படகர் தலைவன் கொட்டுக்காரன் எனக் கூறப்படுவான். இவன் பண்டைக்காலத்தில் வாழ்ந்த குருவச்சா மரபினன் எனச் சொல்லப்படுகின்ருன். . படகர் தீமிதிப்பு நடத்தலாம் எனக் கொட்டுக்காரன் மூலம் அறிவித்த பின்னரே தீமிதிப்பு நடக்கும். தீ மிதிப்புத் தொடங்குவதற்கு முன்னர் மூன்று அல்லது ஐந்து, அல்லது ஏழு பேர் தீ மிதிக்கக் கொட்டுக்காரனுல் த்ேர்ந்தெடுக்கப் படுவர். விழாவுக்கெனக் குறித்த திங்கட்கிழமையன்று பட்கன், குரு, குறும்பன் ஆகிய மூவரும் சேர்ந்து தீ உண்