பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பிற்பகலில், பல படகர் தத்தம் விட்டு முற்றங்களில் அடுப்புக்கரி கொண்டு எருமை, காளி, பசு, ஏர், உடு, கதிர், மதி, பாம்பு முதலியன வரைவர்; பின் வீட்டுக்குட்சென்று கைகளைக் கழுவுவர். பிறகு ஒரு ரொட்டியை எடுத்து அதில் கொஞ்சம் அரிசியும், வெண்ணெயும் வைத்து, விளக்கெண் ணெயில் தோய்த்த திரிகள் மூன்றையும் ரொட்டியில் வைத்து ஏற்றுவர். பிறகு, படகர்கள் அந்த ரொட்டி விளக்கை ஒவ்வொரு குழந்தையும் சுற்றியபின், வயலுக்கு எடுத்துச் சென்று சக்காளத்தி வந்துவிட்டாள் " எனச் சொல்லி எறிவார்கள். விடு திரும்பி, ஒரு விளக்கின்முன் வணங்கி நின்று ஒரு குறிப்பிட்ட பாட்டைச் சொல்லி வாழ்த்துவார்கள். வாழ்த்துப் பாடலில் சிவனது திரு நாமங் கள் பலவும் காணப்படும். பெருவிருந்து விழா : கார்த்திகை மாதத்தில் நடைபெறும் விழா இது. இவ்விழாவுக்குப் படகர் மொழியில் தொத்தா அப்பா ! என்பது பெயராம். பிற்பகலில் ஆகூட்டுக்குள் நெற் சோறு ஆக்கப்பட்டு, மீஞ்சி இலையில் வைத்துண்ணுப்படும். அந்த நாள் முழுவதும் ஊரே மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கி யிருக்கும். கோளுக்கூர் விழா : கோளுக்கூர் என்ற ஊரில் மாகாளிக்காகப் படகரால் கொண்டாடப்படும் விழா கோனுக்கூர் விழா. குறும்பன் எருமை வெட்டிக் கொண்டாடுவது இத்திருவிழா. ஒலக்குடி : இச்சொல் ஒலைக்குடிசை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாம். இத்திரிபிற்குக் காரணம் படகர் மொழியும் தமிழும் இன மொழிகளாம். தீட்டைக் கழிப்பது இந்த ஒலக்குடியில் தான். வீட்டுக்கு விலக்கமான பெண் ஒரு வெள்ளியன்று ஒலக்குடிசைக்குச் செல்வாள். அங்கு ஓர் இரவைக் கழிப் பாள். மறுநாள் காலேயில், அங்கு தன் பழைய உடைகளேக் களேந்து விட்டுப் புத்தாடை பூண்டு வீடு வந்து, அங்குள்ள