பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 அனைவரையும் வணங்கி, வாழ்த்துப் பெற்றுச் செல்வாள். பின் ஞாயிறன்று அவள் தன் உற்ருர் உறவினர் வீடு களுக்குச் சென்று, கடலையும் உணவுப் பண்டங்களும் பெறுவாள். தீட்டுப் பட்ட படகச்சி நிலவைப் பார்க்கும் வரையில் வீட்டின் உட்பகுதிக்குச் செல்லக் கூடாதாம், படகச்சியர் மாதவிலக்குக்கு ஐந்து நாள் ஒதுங்கி யிருக்கின் றனர். படகரிடையே இது கடுமையாகக் கடைப்பிடிக்கப்படு கிறது. காலேயில் முகம் கழுவுவதற்கு முன் திட்டு ஏற்படின் அந்த நாளோடு சேர்த்து ஐந்து நாள் அவள் தனியாக இருத் தல் வேண்டும்; முகம் கழுவியபின் திட்டு ஏற்பட்டால், அந்த நாளேச் சேர்க்காமல் வேறுஐந்து நாள் தனியாக இருத்தல் வேண்டும். தீட்டுப்பட்ட படகச்சி மூன்ரும் நாள் தண்ணிரில் குளிப் பாள். நான்காம் நாளும் குளித்த பின்னர், வேறு உடை உடுத்துவாள். அன்று தன் ஒலக்குடிசை நீங்கி, வீட்டுக்கு வந்து ம்ாலே உணவைத் தானே ஆக்கி உண்டு, வெளி அறையை அடைவாள். மறுநாள் காலையில் அவ்வறை தூய்மையாக்கப்படும். பிறகு அவள் ஓடைக்குச்சென்று குளித்து வருவாள். குளித்து வந்தபின்னர் அவ்வெளி அறையில் மறுநாள் காலேவரை இருப்பாள், அந்த அறை யிலேயே உண்ணவும் செய்வாள். திட்டான பெண்களைத் தொட்ட குழந்தைகளும் உடனே குளிக்கவேண்டுமாம். குளித்தபின்னரே குழந்தைகளே மற்றவர்கள் தொடுவர். திருமணம்: உறவினருள் திருமணம் நடைபெறுவது இல்லை. மண மகன் ஒர் ஊரில் இருப்பான். மணமகள் வேருேர் ஊரில் இருப்பாள். - பெண்ணின் தந்தை, தன் வீட்டு- காட்டு வேலைகளைக் செய்து தனக்குப் பணிவாக நடக்கக் கூடிய ஏழை ஒருவனேயே தன் மருமகளுகத் தெரிந்து எடுப்பான். தன் பெண்ணேத் திருமணம் செய்து தருவதாக அவனிடம்