பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65. i உறுதி கூறுவான். வெற்றிலே மாற்றிக் கொள்ளப்படும். இதன் பின்னர் மணமகன், மணமகள் பருவம் அடையும் வரை தன் வீட்டில் இருந்தோ, அல்லது மாமன் வீட்டிற்குச் சென்று இருந்தோ, மாமன் இடுகின்ற வேலைகளைச் செய்வான். அதுமுதல் அவன், மாமன் குடும்பத்திலுள்ள வர்களில் ஒருவனுகி விடுவான். திருமணம் நடைபெற்றதும் அவனுக்கு மாமனர் சொத்தில் ஒரு பங்கு உறுதி யாகிவிடும். படகருள் பெரும்பாலும் குழந்தை மணம் இல்லை என்றே கூறிவிடலாம், பருவத் திருமணங்கள்தான் அதிக மாக நடைபெறும். இனி, படகர் மணமுறையைச் சிறிது காணலாம்: ' மணமகள், தனது கணவனின் மனேக்குச் செல்லு தற்கு ஓரிரண்டு நாட்களுக்கு முன்னர் மணமகன், தன் அண்ணன் தம்பிமார் சூழ மணமகள் இல்லத்திற்குச் சென்று படகப் பெரியோரைத் தாள் தொட்டு வாழ்த்தி வணங்குவான். பின்னர் தோற்கருவிகள், துளைக்கருவிகள் இசைக்கப்படும். அதன்பின், மணமகள் மணமகன் வீடு செல் ᎧaᎢ 6aᎢ . کي கணவன் இல்லத்தை அடைந்த மணமகளே, மாமியோ, கொழுந்தியோ (கணவன்கூடப் பிறந்தவள்) எதிர்கொண்டு அழைத்து, அவள் கையிலும் காலிலும் நீர் தெளித்து மாலை மணி ' என்றதோர் அணியைக் கழுத்தில் கட்டுவர். பிறகு மணமகளுக்குப் பாலும் சோறும் வழங்கப்படும், அவற்றை அவளும் உண்பது போல் போக்கக் காட்டிய பின்னர், நாத்தி கை கழுவ நீர்தருவாள். பிறகு மணம் ஆன வேறு இரு பெண்களுடன், கோத்தர் வாத்தியம் முழங்க, ஊர்வலமாக ஓடையை நோக்கிச் செல்வாள். மணமகள், ஒடையிலிருந்து நீர் கொணர்வாள். தனது புதிய உற்ருர் உறவினர்க்கு வணக்கம் செலுத்தி, அவர்கள் வாழ்த்துரைத்த பின்னர் ஒரு பெரு விருந்து நடைபெறும். இத்துடன் திருமணவினே முடிகிறது. விருந்து முடிந்தபின்