பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.6 மணமக்கள் ஒர் உயரமான இருக்கையில் அமர்ந்து தம் பரிசுகளே ஏற்பர். படகர்க்குள்ளே திருமண முறிவு சர்வசாதாரணம். படகச்சி வேண்டிய போதெல்லாம் மணவிலக்குப் பெறலாம். விரும்பும் ஆடவனே மணக்கலாம். * * H பெண்டிர்பலரைத் தனக்கு மனைவி ஆக்கிக் கொள் வதிலே படகனும் சளைப்பதில்லை. மனைவியர் எண்ணிக்கை பெருகப் பெருக அவனுக்கு ஒய்வும், சொத்தும் மிகுதியா காக் கிடைக்கும். ஒவ்வொரு மனைவியும் உழைத்து அவ னுக்குச் சொத்துச் சேர்ப்பாள். தன் குழந்தைகளையும் அவளே கவனித்துக் கொள்வாள். அவன் வேலே, உண் பதும் ஊர்சுற்றுவதும், உறங்குவதுமே. படகரிடையே கைம்மை மணமும் உண்டு. கணவனே இழந்த கைம்பெண் கொழுந்தனையோ, மச்சான்யோ, மறுமணம் செய்து கொள்ளலாம். கணவன் எங்கேனும் சென்று விட்டாலும், அவள் தன் கொழுந்தைேடு இன்பமாக வாழலாம். கணவன் தன்னேவிட வயதில் இளையவனாகவும். பருவம் இன்னும் அடையாதவனுகவும் இருந்தால் படகச்சி, அவன் பருவம் அடையும்வரை வேருெரு படகனேடு இன்பம் ப்ெறலாம். உடையார் திருமணம்: - படகருள் ஒரு பிரிவினர் உடையார். இவர்கள் திரு மணத்திற்கும் படகர் திருமணத்திற்கும் வேறுபாடு உண்டு. பால் கம்புகளைக் கொண்டு வருவதற்காக மணமகன் தன் அண்ணன் தம்பியர் புடைசூழ, வாத்தியங்கள் முழங்க அதிகாலையிலே காட்டிற்குச் செல்வான். அதிகாலையில் செல்லுவதனால் யாதொரு தீகிமித்தமும் நிகழாது என்பது அவர்கள் எண்ணம்போலும். கம்புகளை வெட்டும்பொழுது, கம்புகள் மண்ணில் விழுந்து விடாதவாறு அடியிலே ஒரு போர்வை விரித்திருப்பார். கம்புகள் ஒரே வெட்டில் விழ வேண்டுமாம். மணமகனேடு சென்ற உடையார்கள் மணப் பந்தல் போடுவதற்காகப் பன்னிரண்டு கம்புகளே வெட்டிக் கொள்வர். இறுதியில் எல்லோரும் விட்டுக்குத் திரும்புவர்.