பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67。 திருமண வீட்டின் முற்றத்தில் இரண்டு குழிகள் தோண் டிப் பசுவின் சிறுநீர் தெளிக்கப்படும். பூசாரி, கரும்பு, வெல்லம் முதலியன வைத்துப் பால்கம்புகட்குப் பூசை செய் வான். அக் கம்புகளில் ஒரு நூல் சுற்றிக் கட்டப் படும். மணமக்களின் பெற்ருேர்களும் குருவுமாகச் சேர்ந்து பால்கம்புகளைக் குழிகளில் நடுவர். இக் கம்புகளுக்கு எதிரே மணமேடை அமைக்கப்படும். முதல் நாள் நடைபெறும் நிகழ்ச்சி இது. இரண்டாம்நாள், மணமகன் தன் தோழரோடும் பிறரோ டும் மணமகள் வீடு செல்வான். அங்கே ஒரு பெரு விருந்து நடைபெறும். மணமகள் ஒரு திருவிளக்கைத் தொழுது, தன் பெற்ருேரையும் வணங்குவாள். அப்போது அவள் பெற்ருேர், ! உன் வாழ்வு ஒளி பெறட்டும் விரைவில் உன் னிரு கைகள் நிரம்பட்டும் ! என்று மணமகளே வாழ்த்துவர். இவ் வாழ்த்தின் உட்பொருள் 'நீ விரைவில் குழந்தையைப் பெறுவாயாக என்பதாகும். வாழ்த்திய பின் பெண்டிரும் வாத்தியக்காரரும் உடன்வர, துரியா ஒருவன் முன்னே ஒரு மூடை அரிசி கொண்டு செல்ல, ஊர்வலமாக, மணமகள் மன மகன் இல்லத்துட் செல்லுவாள். அவள் மணமகன் இல்லத்து முற்றத்தை அடைந்ததும், அவளிரு கண்கள் திரையிடப்படும். மணமகனின் தாயார், தன் புதிய மருமகளுக்கு ஆரத்தி எடுப் பாள். பின், மணமகள் வலது காலே எடுத்து முன் வைத்து வீட்டினுள் நுழைந்து பாயில் உட்காருவாள். மணமகனுக்கு உறவான, மணமான பெண்டிர் மூவர், இலகளால் அணிசெய்யப்பட்ட மூன்று பானைகளே எடுத்துக் கொண்டு பூசாரியும், கோத்த வாத்தியக்காரரும் சூழ்ந்துவர ஊர்வலமாக ஓடைக்குச் செல்லுவர். குருவுக்கும் பானேகட் கும் வழிபாடு செய்தபின், பானைகளில் நீர்மொண்டு கொண்டு அந்தப் பெண்டிர் மூவரும் ஊர்வலமாகச் சென்று மன மேடையை வந்து அடைவர். பிறகு அவை மணமேடையில் வைக்கப்படும். வாழ்வரசிகள் மூவர் வந்து, அந்த மூன்று பானைகளிலும் நீர் தெளிப்பர். பின், மணமகன் தன் அண் ணன் தம்பி, அக்காள் தங்கை ஆகியோருடன், அந்த மன

-