பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - * வறையை மூன்று முறை வலமாகச் சுற்றி, மணமேடைக்குச் செல்லுவான். மணமேடை இப்பொழுது திரையிடப்படும். அங்கே மூன்று பானைகளிலும் உள்ள நீரில் குளிப்பான். பின், புத்தாடை அணிவான். அவனைத் தாய்மாமன் வந்து வெளி அறைக்குத் துரக்கிச் செல்வான். அடுத்து மண மகளும் இவ்வாறே குளித்துப் புத்தாடை புனைந்தபின், உள் அறைக்குத் தூக்கிச் செல்லப்படுவாள். பிறகு, ஒரு நல்ல வேளையில் மணமக்கள் மணமேடைக்குச் செல்வர். அங்கே மணமகன் ஒரு பாய்மீது நிற்பான். இருவருக்கும் இடையிலே நான்கைந்து பேர் திரைப் பிடிப்பர். திரைக்கு முன்னும் பின்னும் மணமக்கள் நேருக்கு நேர் நிற்பர். பிறகு இரண்டு பேர் கைகளையும் இணைத்துக் கட்டுவர். இரண்டு பேருடைய சுண்டு விரல்களும் தனியாகக் கட்டப்படும். பின் திரை நீக்கப்படும். இருவரும் பாய்மீது அமர்வார்கள். மணமகனின் தங்கையாவது தமக்கையாவது அன்னத ஆரத்தி எடுத்துவிட்டு முன்னல் உட்காருவாள். ஒரு தட்டில், அரிசி போடப்பட்டு அதிலே வெண்ணெய் விளக்கொன்று எரியும். இத்தட்டை மணமக்கள் முன்னர் கொண்டு வைத் தலே ஆரத்தி எனப்படும். குரு, தங்கத் தாலியை வழிபாடு செய்து, மணமகன் கையில் தர, அவன் மணமகள் கழுத்தில் கட்டுவான். பெரியவர்கள் தாலி கட்டலும் சில பகுதிகளில் உண்டு. பின், மணமக்கள் சம்மந்தமாலே சூட்டப்பெற்றுக் காப்புக் கட்டப்பெறுவர். பெண்ணின் உடன்பிறந்தாள். பாலும் அரிசியும் கலந்த கோப்பை ஒன்றைக் கொண்டுவர, மணமக்கள் தம் சுண்டுவிரல்களே அதில் நனைப்பர். பிறகு மணமகன் சிறிது அரிசி எடுத்து மணமகள் வாயில் கொடுப் பான் : மணமகளும் அவ்வாறே செய்வாள் : இவ்வாறு மும் முறை மாற்றி மாற்றிச் செய்வர். பிறகு இருவரும் கைகழு வுவர். இது முடிந்ததும், குருவாவது தாய்மாமனுவது. அரன் சோதி எனப்படும். துருவ நட்சத்திரத்தைக்காண்' கின்றனரா என மணமக்களைக் கேட்பர். இவர்களோ இல்லே என்பர். - * - மூன்ரும் நாள் மணமக்களுக்குப் பரிசுகள் வழங்கப் படும். கர்ப்புக் களையப்படும். அன்று விதைப்புச் சடங்கு