பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 ஒன்றும் நடைபெறும். மணத்தின்போது இருவர் நெற்றி யிலும் திருநீறு பூசுவது மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. -- மறுமணம் :

  • -* * * - உடையார் வகுப்புப் பெண்களும் மறுமணம் செய்து

கொள்ளலாம். ஆனால், மறு கணவன் தன் முதற் கணவனு டன் பிறந்தவகை இருத்தல் கூடாது. வழிவழிச் சொத்து : திருமணம் முடிந்ததும், படகன் பெற்ருேரை விடுத்துத் தனியே சென்று வேருெரு குடிசை போட்டு வாழ்வான். ஆனல் கடைசிமகன், மண்மாலுைம் இறுதிவரை பெற்ருேரி டமே இருந்து, அவர்கள் இறந்தபின் வீட்டைப் பெற்று. வாழ்வான். - - கன்னிகட்டொடு-கன்னி காக்கொடு : பெண்ணின் தலைப்பேற்றின் போது ஏழாம் திங்களிலே நடைபெறும் சடங்கு இது. இந்த நிகழ்ச்சிக்குப் பின் மண விலக்குப் பெறுவதாக இருப்பின் பஞ்சாயத்து மூலம்தான் அதனைப் பெறமுடியும். 'கன்னிகட்டொடு நடைபெருவிட்டால் தந்தை தன் குழந்தைமீது உரிமை கொண்டாட முடியாது. இச் சடங்கில் நூல் கட்டுதல் சிறப்பாக இடம்பெறும். உற வினர் சூழக் கணவனும், மனைவியும் இருப்பர். தன் மாமனே நோக்கி, என் மனைவி கழுத்தில் நூலே எறியபட்டுமா ? (கட்டட் டுமா) என்று கேட்க, அவன் அனுமதி கொடுக்க, இவன் எறி வான். முடிச்சு இல்லாத நூலே அவன் பெற்ருல், இரு வரும் தூய்மையற்றவர் எனக் கருதப்படுவர். தாழ்வாரத் திலேயே அமர்த்தப்பட்டு அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப் படும். இரவிலே இருவரும் துயின்ற பாய்கள் மறுநாள் தூய்மை செய்யப்படும். கணவன் மனேவி இருவரும் குளித்த பின்னரே தூய்மையுடையவர் எனக் கருதப்படுவர். பிள்ளைப் பேறு : தலைப் பேறு வீட்டினுள் நிகழாது. தாழ்வாரத்தில் அமைக்கப்பட்ட ஒர் அறையில்தான் கிகழும். பிள்ளே பிறந் மலை-5