பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 O ததும், பிள்ளையும் தாயும் வீட்டு முன்றிலில் வைக்கப்படுவர். அவள் பிறை நிலவைக் காணும் வரை அங்கேயே இருப்பாள். குழந்தை பிறந்த ஒரு திங்களுக்குள் அவள் தன் கணவன் வீடு திரும்புவாள். கணவன் வீட்டை அடைந்ததும் ஆகூட்டின் விளக்கருகில் நிற்கும் ஒரு முதியவனின் காலடியில் குழந் தையை வைப்பாள். அவன் குழந்தையின் தலையைத் தனது வலது கையால் தொட்டு வாழ்த்துவான். பின் ஒரு பெரு விருந்து நடக்கும். விருந்துக்கு முன்னர் அவளுக்குப் பாலும் அரிசியும் கோப்பையில் தரப்படும். பிறகு உறவினர், பாலே யும் அரிசியையும் எடுத்துக் குழந்தையின் நாவில் வைப்பர். பெயரிடல் : குழந்தை பிறந்த ஏழு அல்லது ஒன்பது அல்லது பதி னேராம் நாளில் பெயரிடுவர். சமூகத்தாருக்கு ஒரு விருந்து வைக்கப்படும். குழந்தையின் தந்தைவழிப் பாட்டன் பித்த ளேக் கிண்ணத்தில் பாலும் சாமைச் சோறும் கலந்து அதை ஆகூட்டில் வைப்பான். குழந்தை ஒடையிலிருந்து கொண்டு வரப்பட்ட நீரில் குளிப்பாட்டப்பட்டுத் திருநீறு பூசப்படும். பின்னர் அதன் இடுப்பில் நூலும், மணிக்கட்டில் வெள்ளி அல்லது இரும்பாலான வளேயும், கழுத்தில் வெள்ளி மணி களும் கட்டப்படும். பிறகு அவ்வூர் முதிய வாழ்வரசன் (மனைவியொடு வாழ்வான்) ஒருவன், அணி செய்யப்பட்ட மதலையைக் கையில் எடுத்து, ஏற்கெனவே தேர்ந்தெடுத்த பெயரைச் சூட்டுவான். இதன்பின் முதியவனும், பெற்ருேரும், பாட்டனும், பாட்டியும் குழந்தை வாயில் சிறிது பாலே வார்ப்பர். முடி எடுத்தல் : குழந்தை ஆணுக இருந்தாலும் பெண்ணுக இருந்தாலும் பிறந்த ஏழாவது திங்களில் முடி எடுக்கப்படும். ஒரு படக னின் தொடையில் குழந்தை இருக்கும். மற்ருெரு படகை வது நாவிதனுவது அதன் தலையில் நீர் தடவிய பின் தாய் மாமன், சிறிது மயிரைக் கத்தியால் எடுப்பான். பிறகு நாவிதன் முடி முழுவதையும் எடுப்பான்.