பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 1 மரணப் படுக்கை : படுக்கையில் உயிர் ஊசலாட ஒருவன் கிடக்கும்பொழுது தங்க நாணயம் ஒன்று, நெய் அல்லது வெண்ணெயில் முக்கப் பட்டு, அவன் வாயில் திணிக்கப்படும். இதனை அவன் விழுங்கிவிட்டால், அதன்பின் அவன் வாழ நினைத்தாலும் பிழைக்க முடியாது. காரணம், அவன் விரைவாக இறக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகிறது. அவனல் விழுங்க முடியாவிட்டால், அக்காசு அவன் கையில் கட்டப்படும். " சாவு ஆகிய ஆற்றைக் கடப்பதற்கு வன்மை தர, நெய் அங்கே பாலத்தைக் காக்கும் காவலாளனுக்குக் கையூட்டுத் தருவதற்காக அந்தத் தங்க நாணயம். இவ்வாறு படகர் கருதுகின்றனர். இறுதிப் பயணம் : ஆட்டமும் பாட்டமும் ஒடுங்கிப் பிணமானவுடன், உறவி னர் ஒப்பாரி வைப்பர். பாடை கட்டப்படும்வரை பிணம் வீட்டுக்குள்ளேயே கிடக்கும். இறந்த 24 மணிநேரத்தில் பிணத்தை எரித்துவிட வேண்டும் என்பது பழைய வழக்கம். இன்ருே, உறவினர் வர மூன்று நாளானுலும் பிணம் எடுக்கப் படமாட்டாது. பிண எரிப்பு, செவ்வாய் நீங்கிய பிற கிழமை களில்தான் நடக்கும். பினச் செய்தியை அக்கம் பக்கத்து ஊர்கட்குச் சென்று சொல்பவன் துரியா. அவனுக்குக் கூலி நாற்பத்தெட்டுத் துட்டு. பினச் செய்தி கொண்டு செல்லும் துரியா, ஒர் ஊரில் தன் தலைப்பாகையை முதலில் கழற்றினல் ஏதோ இழவுச் செய்தி கொண்டு வந்திருக்கிருன் என்று ஊரார் எல்லோரும் அறிந்து கொள்வர். பிறகு அவன் ஒவ் வொரு வீட்டின் முன்பும் சென்று, கின்று, அழைத்து இழவுச் செய்தியை அறிவித்துவிட்டுத் திரும்புவான். பிண ஊர்வலம் : சுடுகாடு செல்லும் நாளன்று பிணம், ஒரு க்ட்டிலில் திறந்த வெளியில் வைக்கப்படும். பிறகு மூன்று எருமைகள்