உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72. விரட்டப்பட்டு அவற்றுள் ஒன்றைப் பிடித்து வந்து பிணக் கட்டிலே மூன்றுமுறை சுற்றும்படி செய்வர். இறுதியில் பிணத்தின் வலக்கையைப் பிடித்து, எருமைக் கொம்புகளே மூன்றுமுறை சுற்றச் செய்வர். பிறகு, எருமையின் பால் கறந்து பிணத்தின் வாயில் விடப்படும். பாடை ஐந்து முதல் பதிைேரு மாடிகள்வரை வைத்துக் கட்டப்படும். பிறகு நன்கு அழகு செய்யப்பட்டுக் கறுப்புத் துணியால் மூடப்படும். இறந்தவன் இளைஞனுக இருந்தால் கொடிகள் சுற்றப்படும் : அவன் படித்த சுவடிகள் பாட்ை யில் தொங்கவிடப்படும். ஏழை மக்களின் பாடைகள், ஐந்து குடைகள் வைத்துத் துணிகளால் மூடிய வெறும் கட்டில்ே. பிறகு, எருமை சுற்றியவுடன் பிணத்தைக் குளிப்பாட்டி, அங்கியும் தலைப்பாகையும் சூட்டி எடுத்துச்சென்று, பாடை யின் அடித்தட்டில் வைப்பர். அது ஒரு போர்வை யால் சுற்றப்படும். இரு வெள்ளிக் காசுகள், புகையிலை, கோழிமலம், வெல்லம், சாமைமாவு, ரொட்டிகள் ஆகியன அடங்கிய கூடைகள் வைக்கப்படும். இறந்தவனுக்கு உறவான பெண்டிர்கள் பாடையைச் சுற்றி மணியடிக்கும் வரை உட்கார்ந்திருப்பர். பிறகு கலைந்துவிடுவர் ; மற் ருெரு குழு உட்காரும். படகர்கள் வந்து பிணத்தின் தலையைத் தொட்டு வணங்குவர் ; பெண்டிரும் துரியாக்களும் வந்து காலேத்தொட்டு வணங்குவர். வணங்குவோருட் சிலர், அதற்கென்று நெய்யப்பட்ட சிவப்பு, மஞ்சள் பட்டை கள் உடைய வெள்ளேத் துணியைத் துப்பட்டிக்குள் வைப் பர். பிறகு கோத்தர் வாத்தியம் முழ்ங்க எல்லோரும் பாடையைச் சுற்றிக் கூத்தாடுவர். நெருங்கிய உறவினர் கள். தம் தலைப்பாகையைக் களைந்து பிணத்துக்கு வணக்கம் தெரிவிப்பர். கூத்தாடுவோர் கோட்டும், மெல்லிய தலைப் பாகையும் அணிந்திருப்பர். இறந்தவர் ஆணுக இருப் பின் ஆடவரே கூத்தாடுவர், பெண்ணுகயிருப்பின் ஒரு மூதாட்டி மட்டும் கூத்திற் கலந்து கொள்வாள். இழவு விட்டுக்குச் செல்வோர், பிற்பகலில் ஒரு மந்தையில் எல் லோரும் கூடிக் கூட்டமாகச் செல்வர். இறந்தவன் மருமக்