பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கள் மட்டக் குதிரைகளில் வருவர். பாடையை நெருங்கி யதும் எல்லோரும் ' சாகோச் என்று முழங்குவர். முட்டுக்கோட்டன் ஒருவன் அரிவாளிரண்டு, கோடரி ஒன்று, புல்லாங்குழல் ஒன்று, கைத்தடி ஒன்று ஆகியவை களைக் கொண்டு வந்து பாடையின் மீதோ, அருகிலோ வைப் பான். எல்லோரும் வந்தபின், பாடை வீட்டுக்கும் சுடு காட்டுக்கும் இடையே ஓரிடத்தில் இறக்கப்படும். பாடை யோடு தானியக் கூடைகளே ஏந்திப் படகப் பெண்டிர் செல்லுவர். பின் பாடை பிய்த்துக் குலைக்கப்படும். கண வனே இழந்தவள், பாடைக்கு அருகில் கொண்டுவரப் படுவாள். அவளது நகையெல்லாம் கழற்றப்படும். பின் அவள் சிறிது மயிரையும், காதோலையிலிருந்து ஒரு ஒலேக் கீற்றையும் எடுத்து அவற்றை இறந்தவனின் துணியில் முடித்து விடுவாள். பிறகு இறந்தவனின் தங்கை தமக்கை யர் தம்மயிரை எடுத்து அவன் துணியில் முடிவர். அவ னுடைய வைப்பாட்டிகளும் (Keeps) வந்து அவ்வாறே செய்வதோடு, ஓர் இலேக் கொப்பையும் துணிக்குள் வைப் பர். பின் முதியவன் ஒருவன் பிணத்தின் தலைமாட்டில் கின்று, அவனது குற்றங்களைக் கூறிப் பாவமன்னிப்பை நடத்தி வைப்பான். அப்போது பாடும் பாடல் நெஞ்சை உருக்கும் தகையதாக இருக்கும். இப்பாடலே ஒரு முறை அறிஞர் தார்சுடன் ஒலிப்பதிவு செய்திருக்கிருர். அப் பாடற் கருத்தைப் பார்ப்போம் : - பாவ மன்னிப்புப் பாடல் ஆண்டி ஒருவன் மாண்டனன் இந்நாள் : அவன் நினைவுக்கு ஆவொன்று விடுதலைசெய்யப்படும் மண்ணி லிருந்து மறுவுல குக்கு மாட்சிமை மிக்க தேரிலே பறப்பான் : - செத்த மனிதன் இந்த உலகிற் செய்தனவும் இவன் தன் பெற்றேர், முன்னேர், அண்ணன், தம்பி அனைவரும் செய்த எண்ணிலாப் பாவங்கள் எல்லாம் மற்றும்,