பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 எல்லைக் கோட்டை அழித்த பாவம், வரப்பை வெட்டி வைத்த பாவம், உடன்பிறந்தாரைக் கொன்ற பாவம் கள்ளிச் செடியை யாருங் காணுது நள்ளிரவிலே வெட்டிய பாவம், எல்லைக் கப்பால் இலங்கிய ஒரு முள்ளிச் செடியை முளையில் கிள்ளிய பாவம், பெருக்கு மாற்ருல் பிறர்தானியம் கூட்டிய பாவம், பசுங்கிளைகளை வெட்டிய பாவம், மெய்யை விடுத்துப் பொய்யுரைத்த பாவம், விதைத்த விதையைக் கவர்ந்த பாவம் வளரும் பயிரை வதக்கிய பாவம், பூனைகள் புசிக்கப் பறவையளித்த பாவம், ஏழை மக்களை ஏங்கச் செய்த பாவம் மற்றும், கழிவு ைேரத் தெருவில் விட்ட பாவம், கிரகணம் கண்டபின் உறங்கச் சென்ற பாவம், மாற்ருர் எருமை மழைபோல் சொரியும் தீம்பால் கண்டு பொருமை கொண்ட பாவம், அயலார் விளையுள் கண்டு அழுக்காறடைந்த பாவம், எல்லைக்கல்லை எடுத்து வைத்த பாவம், கருமாதியில் விடுத்த கன்றைக் கொண்ட பாவம், பளிங்கு நீரைப் பாழாக்கிய பாவம். எரியும் நெருப்பில் சிறுநீர் கழித்த பாவம். ஆசிரியன் செய்த நன்றி மறந்த பாவம், மேலோ ரிடத்தில் தீக்கோள் புகன்ற பாவம், உண்ணும் உணவில் நஞ்சைக் கலந்த பாவம், குளிர்காயத் தீத்தர மறுத்த பாவம் மற்றும் மாற்ருர் பசிக்க மறைந்திருந்து புசித்த பாவம் தப்பான வழியைச் செப்பிய பாவம், மாமனரை மரத்தடியில் படுப்பித்த பாவம், மாமியாரை உதைத்துத் தள்ளிய பாவம் இயற்கை அல்லாச் செயற்கை உணர்வுக்கு இரையாகியே இயலாதன செய்த பாவம்