பக்கம்:மலைவாழ் மக்கள்-நீலமலை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 மகன் மருவும் மாதரைத் துன்புறுத்திய பாவம் குளத்தையும் குட்டையையும் உடைத்த பாவம் மாற்ருர் ஊரின் மாபெரும் செழிப்பைக் கண்டு பொருமை கொண்ட பாவம் அக்கம் பக்கத்து மக்களோடு பகை கொண்ட பாவம், காட்டு வழிச் செல்லும் மக்களிடம் கயமைத் தனம் புரிந்த பாவம், இன்னும் எத்தனை எத்தனையோ கொடிய பாவங்கள் முந்நூறு செய்தாலும் அத்தனை பாவமும் கன்றுடன் கழிவனவாக ! பாவம் முழுதும் நீக்கப்படுவனவாக ! குற்றம் எல்லாம் பொறுக்கப் படுவனவாக ! வீட்டின் கதவு திறக்கப் படட்டும் ! கரகின் கதவு மூடிக் கொள்ளட்டும் ! அறத்தின் கை அனைத்துலகும் நீளட்டும் ! கொடுமைகள் பலவும் குறைவனவாக ! எழிலும் வளமும் எங்கும் மலிக ! வெம்மை மடிக தண்மை மலர்க ! *நூலின் பாலம் எளிதில் கிடைக்க. பாவப் பள்ளம் மேவப்படட்டும் ! தங்கத் துானே எங்கள் மகன் சடுதியில் அடைக அடைக ! ஆருயிரம் ஆதிகளின் அடியைப் பார்த்துப் பன்னிராயிரம் பதிகளின் பாதம் பார்த்து கான் முகன் செல்லும் தாள்களைப் பற்றி எங்காடும் போற்றும் இறைவன் தவ உலகை இவன் அடைவாகை ! ஆம் ஆம் ! அப்படியே ஆகட்டும் !

  • மேலுலகுக்குச் சாவு என்னும் ஆற்றைத் தாண்டி செல்ல உயிர்கட்குதவும் ஒர் பாலம் நூல்பாலம் எனப்படும். இவ்வாறு படகர் கருதுவர். இவ்வுலகில் நற்றவம் புரிந்த உயிர்களே அந்நூல் பாலம் வழியே செல்லக்கூடும்.